விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak!

Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் TVS iQube-ஐ பின்னுக்கு தள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம்.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தின் ஓர் மின் வாகனம் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

Bajaj நிறுவனத்தின் Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டிய வாகனம் ஆகும். கடந்த ஜூலை மாத விற்பனை நிலவரத்தின்படி இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 730 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இது கடந்த ஆண்டு (2020) ஜூலை மாதத்தைக் காட்டிலும் மிக மிக அதிகம் என கூறப்படுகின்றது. அதாவது, 2020 ஜூலை மாதத்தில் Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 31 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மிக குறைந்த விற்பனை நடப்பாண்டில் பல மடங்கு உயர்ந்திருக்கின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இதற்கு இந்தியாவில் எரிபொருள் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்ததை எட்டி வருவதும் ஓர் காரணமாக இருக்கின்றது. நாடு முழுவதும் பெட்ரோல் ரூ. 100 தாண்டை விற்பனைச் செய்யப்படுகின்றது. தமிழகத்தில் அண்மையில் ஆளும் அரசு வரியைக் குறைந்ததன் காரணத்தினால் தற்போது ரூ. 99.47க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இதுபோன்று மிக அதிக விலையில் எரிபொருட்கள் விற்கப்படுவதனால் மக்கள் பலர் தற்போது மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சில மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன. ஆகையால், கடந்த காலங்களைக் காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைச் சற்றே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இந்த நிலையிலேயே தனது நிறுவனத்தின் தயாரிப்பு கடந்த காலங்களைக் காட்டிலும் நல்ல விற்பனையைப் பெற்று வருவதாக Bajaj தகவல் வெளியிட்டுள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதத்திலும் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லேசான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. 2021 ஜூன் மாதத்தில் 452 யூனிட் வரை Bajaj Chetak விற்பனையாகியிருக்கின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இவ்வாறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வரவேற்பு தொடர்ச்சியாக இந்தியர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. இது ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இதற்கு போட்டியாக இந்திய சந்தையில் TVS iQube விற்பனையில் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 ஜூலையில் 540 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இது Bajaj Chetak-ஐக் காட்டிலும் சற்று குறைவான விற்பனை எண்ணிக்கை ஆகும். ஆனால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2021 மாதத்தில் மிக அதிகபட்ச விற்பனையைப் பெற்றிருந்தது. 639 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்றது. இந்த விற்பனை வளர்ச்சியையே தற்போது Bajaj Chetak உடைத்து முன்னேறி வந்திருக்கின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

Bajaj Chetak தற்போது நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. புனே, நாக்பூர், அவுரங்காபாத், பெங்களூரு, மைசூரு மற்றும் மங்களூரு ஆகிய நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கிறது. மிக விரைவில் சென்னை போன்ற நாட்டின் பிற முக்கிய நகரங்களில் Chetak விற்பனைக்கு வர இருக்கின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

மேலும், 22 புதிய நகரங்களில் விற்பனைக்குக் கொண்டு வர Bajaj திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடத்திற்குள் இப்பணியை செய்து முடிக்க நிறுவனம் இலக்க நிர்ணயித்துள்ளது. ஆகையால், மிக விரைவில் புதிய நகரங்களின் நுழைவு குறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

Bajaj Chetak தற்போது Urbane மற்றும் Premium என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் Urbane தேர்விற்கு ரூ. 1.42 லட்சம் என்ற விலையும், Premium தேர்விற்கு ரூ. 1.44 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Bajaj Chetak ஓர் நியோ-ரெட்ரோ உருவத்திலான மின்சார ஸ்கூட்டராகும்.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh IP67 தரத்திலான லித்தியம்-அயன் பேட்டரியில் இயங்குகின்றது. இது 3.8kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும். இந்த மின் மோட்டாரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... TVS iQube-ஐ விற்பனையில் பின்னுக்கு தள்ளிய Bajaj Chetak! இனி பெட்ரோல் வாகன விற்பனை என்ன ஆக போகுதோ!

ஈகோ மோடில் வைத்து Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்கும் போதே இந்த உச்சபட்ச ரேஞ்ஜை பெற முடியும். அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஸ்போர்ட் மோடில் சென்றால் 85 கிமீ ரேஞ்ஜை மட்டுமே அது வழங்கும். இந்த எலெக்ட்ரிக்ஸ் கூட்டரை 5 ஆம்பியர் பவர் கொண்ட சாக்கெட்டில் வைத்துகூட சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை ஒட்டுமொத்தமாக 6 வகையிலான நிற தேர்வுகளில் Bajaj விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj chetak e scooter gets highest sales in 2021 july
Story first published: Saturday, August 21, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X