அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரே ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனை செய்யப்பட்டு வரும் சேத்தக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கணிசமாக உயர்த்தியுள்ளது. இதற்கு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட தகவல்களை இனி செய்தியில் பார்ப்போம்.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பன் & ப்ரீமியம் என விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

இவற்றின் புதிய விலைகள் ரூ.1.15 லட்சம் மற்றும் ரூ.1.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முன்பு இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.1,00,000 மற்றும் ரூ.1.15 லட்சமாக இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேயானால், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை அதிரடியாக ரூ.15,000 உயர்த்தப்பட்டுள்ளது.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

அதேபோல் சேத்தக் ப்ரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஏற்ப ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. மேலும் இந்த விலை உயர்விற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்சமயம் சேத்தக்கை தயாரிக்கும் பணிகளில் சில கடினமான சூழல்களை பாகங்கள் பற்றாக்குறையுடன் சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக சேத்தக் முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

இதன் காரணமாக சேத்தக்கின் விற்பனை கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு மத்தியில் தான் தற்போது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.15,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

இந்த பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைக்கு புனேவிலும் பெங்களூருவிலும் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதனை மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்த பஜாஜ் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தான் தயாரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

பஜாஜ் சேத்தக்கில் 4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் பொருத்தப்படுகிறது. இவற்றின் உதவியுடன் அதிகப்பட்சமாக 16 என்எம் டார்க் திறனை பெறவும், சிங்கிள் சார்ஜில் 95 கிமீ தூரம் வரையில் பயணிக்கவும் முடியும்.

அதிரடியாக விலை ரூ.15,000 அதிகரிப்பு!! சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறது கனவாவே போய்டுமோ!

பேட்டரியை சார்ஜ் செய்ய சேத்தக்கில் ஸ்டாண்டர்ட் & விரைவு-சார்ஜிங் என இரு விதமான தொழிற்நுட்பங்களும் வழங்கப்படுகின்றன. பஜாஜ் சேத்தக்கிற்கு விற்பனையில் தற்சமயம் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் எனர்ஜி 450எக்ஸ் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
Bajaj Chetak Electric Scooter Prices Hiked: Here Is The New Price List!
Story first published: Tuesday, March 16, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X