மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

இந்தியாவில் ஏகப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அவற்றில் முன்னணி நிறுவனங்களுடையது என்று பார்த்தால், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சொல்லலாம்.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

பெட்ரோல் ஸ்கூட்டர்களை காட்டிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை இந்தியாவில் குறைவாகவே உள்ளது. ஆனால் நீண்ட நாட்களுக்கு இந்த நிலைமை இருக்காது.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் அவற்றின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாடெங்கிலும் கொண்டு செல்ல தயாராகி வருகின்றன. சேத்தக் தற்போதைக்கு புனே மற்றும் பெங்களூருவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

அதுவே டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூர் மற்றும் டெல்லி நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும் இறக்குமதி பாகங்களின் பற்றாக்குறையினால் சேத்தக்கின் முன்பதிவுகளை கடந்த சில மாதங்களாக பஜாஜ் நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...
Sales 2021 Bajaj Chetak TVS Iqube Difference
Jan 30 211 -181
Feb 150 203 -53
Mar 90 355 -265
Apr 508 307 201
Total 778 1,076 -298

இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான விற்பனையில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் பஜாஜின் சேத்தக்கை விற்பனையில் முந்தியது. ஆனால் மீண்டும் பஜாஜ் சேத்தக்கின் முன்பதிவுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்டு, உடனடியாக மூடப்பட்டன.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

வெறும் 48 மணிநேரங்கள் மட்டுமே சேத்திற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டு இருந்தாலும், அந்த குறுகிய நேரத்திற்குள்ளாக ஏகப்பட்டோர் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்துள்ளனர் என்பது தற்போது கிடைத்துள்ள இதன் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கையை பார்க்கும்போது தெரிய வருகிறது.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...
Electric Scooter Apr-21 Mar-21 Difference Growth (%)
Bajaj Chetak 508 90 418 464.44
TVS Iqube 307 355 -48 -13.52
Total 815 445 370 83.15

கடந்த ஏப்ரலில் மொத்தம் 508 சேத்தக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 464.44 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 90 சேத்தக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

மேலும் கடந்த மாத விற்பனையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப்பை முந்தியுள்ளது. அதுமட்டுமின்றி சேத்தக்கின் எழுச்சியால் ஐக்யூப்-இன் விற்பனை முந்தைய 2021 மார்ச் மாதத்தை காட்டிலும் 13.52% குறைந்துள்ளது.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

ஆனால் இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களின் விற்பனையை மொத்தமாக எடுத்து பார்த்தோமேயானால், டிவிஎஸ் ஐக்யூப் மொத்தம் 1,076 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் சேத்தக் 778 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

மீண்டும் டாப் கியரில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை!! கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஐக்யூப்-ஐ முந்தியது...

இதனால் சேத்தக்கின் முன்பதிவுகளை மீண்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் துவங்கினாலும் மட்டுமே அதன் மின்சார ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்க முடியும். அதற்கு எத்தகைய சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு உள்ளன என்பது தெரியவில்லை.

Most Read Articles
English summary
Bajaj Chetak Electric Scooter Posts Highest Ever Sales, Beats TVS iQube – April 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X