தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

இந்திய சந்தையில் தற்சமயம் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை குறைவு தான். சேத்தக் & ஐக்யூப் என மிகவும் சில மாடல்கள் மட்டுமே தற்போதைக்கு உள்ளன.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

இவை இரண்டின் விற்பனையும் தற்சமயம் நல்லப்படியாகவே உள்ளது. இந்த 2021ஆம் ஆண்டு துவக்கத்தில், ஜனவரி மாதத்தில் இவை இரண்டும் 241 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த செப்டம்பரில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 1,408 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

இதில் இருந்து வாடிக்கையாளர்களின் தேவை மெதுவாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் சாய்ந்து வருவதை அறியலாம். பெட்ரோல் விலை உயர்வு வாடிக்கையாளர்களின் இத்தகைய மாற்றத்திற்கு ஒரு காரணம் என்றாலும், இதனை காட்டிலும் முக்கியமானது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள மானியங்கள் ஆகும்.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

முன்பெல்லாம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தாலும் அதன் விலை அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விலைகள் கிட்டத்தட்ட பெட்ரோல் 2-வீலர்ஸிற்கு இணையானதாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

வாகனம் வழங்கக்கூடிய ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு உள்ளிட்டவை தான் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். ஒரு இ-ஸ்கூட்டரின் விற்பனைக்கு இந்த இரு காரணிகள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

கடந்த 2021 செப்டம்பரில் 642 பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப், சேத்தக்கை காட்டிலும் சற்று அதிகமாக 766 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுதான், இவை இரண்டும் மொத்தமாக கடந்த மாதத்தில் 1,408 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

அதுவே 2020 செப்டம்பரில் 288 சேத்தக் ஸ்கூட்டர்களும், வெறும் 7 ஐக்யூப் ஸ்கூட்டர்களுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் சேத்தக்கின் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றால், டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை பல மடங்காக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்யூப்பை காட்டிலும் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

ஆனால் சேத்தக் இ-ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியாமல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு ஏற்பட்ட தடை மற்றும் கடந்த ஒரு வருடத்தில் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வரும் சேத்தக் ஸ்கூட்டரின் விலைகள் உள்ளிட்டவை ஐக்யூப்பிற்கு சாதகமாக அமைந்துவிட்டன. இதனால் தான் கடந்த செப்டம்பர் மாதத்தில் சேத்தக்கை காட்டிலும் 120 யூனிட்கள் அதிகமாக ஐக்யூப் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

கடந்த செப்டம்பரில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய 2021 ஆகஸ்ட்டிலும் சேத்தக்கை காட்டிலும் ஐ-க்யூப் ஸ்கூட்டரின் விற்பனை கிட்டத்தட்ட 300 யூனிட்கள் அளவிற்கு அதிகமாக இருந்தது. அதாவது கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் 364 சேத்தக் ஸ்கூட்டர்களும், 649 ஐ-க்யூப் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

இதில் குறிப்பாக ஐ-க்யூப் ஸ்கூட்டர்களின் விற்பனையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அடைந்திருக்கும் அதிகப்பட்ச உச்சம் இதுதான். அதாவது ஒரு மாதத்தில் இந்த அளவிற்கு (766 யூனிட்கள்) ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டது கிடையாது. இதற்கு முன் ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட 649 யூனிட்கள் தான் அதிகமாக இருந்தது.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

மொத்தமாக இந்த 2021ஆம் வருடத்தில் 3,670 டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் கூட (2021 மே தவிர்த்து) ஐக்யூப்பின் விற்பனை எண்ணிக்கை 100க்கு கீழ் சென்றது இல்லை. கொரோனா இரண்டாவது அலை பரவலின் காரணமாக கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரு ஐக்யூப் ஸ்கூட்டர் கூட விற்பனையாகவில்லை.

தாறுமாறாக உயர்ந்துள்ள டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை!! வேகமாக அதிகரிக்கும் இ-ஸ்கூட்டர் பயன்பாடு

மறுப்பக்கம் பஜாஜ் சேத்தக் ஐ-க்யூப்பை பொறுத்தவரையில், இந்த இ-ஸ்கூட்டர் ஒரு மாதத்தில் அதிகப்பட்சமாக 730 யூனிட்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஏப்ரல், மே & ஜூலை மாதங்களில் மட்டுமே விற்பனையில் ஐக்யூப்பை சேத்தக் முந்தி இருந்தது. இதில் ஜூலை மாதத்தில் தான் 730 சேத்தக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மொத்தமாக கடந்த 9 மாதங்களில் 2,997 யூனிட் சேத்தக் ஸ்கூட்டர்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 21, 2021, 11:56 [IST]
English summary
Bajaj chetak vs tvs iqube 2021 sep sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+