இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

பஜாஜ் நிறுவனம் டோமினார் 250 பைக்கில், புதிய ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 1.54 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். பஜாஜ் டோமினார் 250 பைக் தற்போது மூன்று புதிய வண்ண தேர்வுகளுடன், ஒரே ஒரு வேரியண்ட்டில் கிடைக்கிறது.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு தற்போது முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. அதே சமயம் டெலிவரி பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளன. ரேஸிங் ரெட்/மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ்/மேட் சில்வர், ஸ்பார்க்ளிங் பிளாக்/மேட் சில்வர் ஆகிய மூன்று புதிய ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளில் பஜாஜ் டோமினார் 250 பைக் கிடைக்கும்.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

அதே நேரத்தில் கேன்யான் ரெட் மற்றும் சார்கோல் பிளாக் ஆகிய இரண்டு வண்ண தேர்வுகளில் பஜாஜ் டோமினார் 250 பைக் தொடர்ந்து கிடைக்கும். புதிய வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டிருப்பதை தவிர பஜாஜ் டோமினார் 250 பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இன்ஜின், வசதிகள் ஆகிய அம்சங்கள் அப்படியே தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

பஜாஜ் டோமினார் 250 பைக்கில், 248 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 23.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் டோமினார் 250 பைக்கின் பெரும்பாலான மெக்கானிக்கல் ஹார்டுவேர் மற்றும் டிசைன் அம்சங்கள் டோமினார் 400 பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளன.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

பஜாஜ் டோமினார் 250 பைக்கில், எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சிங்கிள்-பீஸ் ஹேண்டில்பார், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க், ஸ்பிளிட் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்காக இருக்கும்.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

சஸ்பென்ஸன் பணிகளை பொறுத்தவரை, முன்பகுதியில் யூஎஸ்டி ஃபோர்க்குகளும், பின் பகுதியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் செட்அப்பும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரை முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

பஜாஜ் டோமினார் 250 பைக்கிற்கு ஏற்கனவே இந்தியாவில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ட்யூயல்-டோன் வண்ண தேர்வுடன் கூடிய பஜாஜ் டோமினார் 250 பைக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் இளைஞர்கள் மற்றும் பைக் ஆர்வலர்களை கவரும் என பஜாஜ் நிறுவனமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

பஜாஜ் டோமினார் 250 பைக் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது பஜாஜ் டோமினார் 400 பைக்கின் உடன்பிறப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலான வசதிகள் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் பஜாஜ் டோமினார் 400 பைக்கில் இருந்து பஜாஜ் டோமினார் 250 பைக்கிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியாவில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இதில் என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?

கேடிஎம் ட்யூக் 250 மற்றும் சுஸுகி ஜிக்ஸர் 250 உள்ளிட்ட பைக்குகள் உடன் பஜாஜ் டோமினார் 250 போட்டியிட்டு வருகிறது. டிசைன், செயல்திறன் என அனைத்தும் சரி விகிதத்தில் கலந்த கலவையாக பஜாஜ் டோமினார் 250 உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இளைஞர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பஜாஜ் டோமினார் 250 பைக் பெற்று வருகிறது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj dominar 250 dual tone colours launched in india here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X