பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

வாகனங்களுக்கான உற்பத்தி செலவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது தெரிவித்து வருகின்றன. அத்துடன் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் சமீப காலமாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. மேற்கண்ட 2 காரணங்களால், இந்தியாவில் தற்போது வாகனங்களின் விலை உயர தொடங்கியுள்ளது.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

குறிப்பாக முன்னணி டூவீலர் நிறுவனங்கள் பலவும் தற்போது தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மற்றும் பெனெல்லி போன்ற நிறுவனங்களின் டூவீலர்கள் விலை தற்போது உயர்ந்துள்ளது. ஆனால் மறுபக்கம் ஒரு சில நிறுவனங்களின் டூவீலர்களின் விலை குறைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இதற்கு யமஹா நிறுவனம் ஒரு உதாரணம். யமஹா நிறுவனத்தின் எஃப்இஸட் 25 மற்றும் எஃப்இஸட்எஸ் 25 பைக்குகளின் விலை கடந்த மாதம் குறைக்கப்பட்டது. அதேபாணியில் தற்போது பஜாஜ் நிறுவனம் தனது டோமினார் 250 பைக்கின் விலையை அதிரடியாக குறைத்து, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விலை முன்பு 1,70,976 ரூபயாக இருந்தது. ஆனால் பஜாஜ் நிறுவனம் தற்போது டோமினார் 250 பைக்கின் விலையை 1,54,176 ரூபாயாக குறைத்துள்ளது. அதாவது பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விலை 16,800 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய விலை குறைப்பு நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையின் காரணமாக இந்தியாவில் பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் டோமினார் 250 பைக் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது பஜாஜ் டோமினார் வரிசையில் எண்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்திய சந்தையில் சுஸுகி ஜிக்ஸெர் 250 உள்ளிட்ட பைக்குகளுடன் பஜாஜ் டோமினார் 250 பைக் போட்டியிட்டு வருகிறது. பஜாஜ் டோமினார் 250 பைக்கில், 248.77 சிசி லிக்யூட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 26.6 பிஎச்பி பவரையும், 23.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என பஜாஜ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விற்பனை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பஜாஜ் டோமினார் 250 பைக் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஏனெனில் பெட்ரோல் விலை உயர்வு, வாடிக்கையாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடி ஆகிய காரணங்கள் பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பஜாஜ் டோமினார் 250 மட்டுமல்லாது, மற்ற பைக்குகளின் விற்பனையிலும் மேற்கண்ட இரண்டு பிரச்னைகளும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Dominar 250 Price Reduced By Rs 16,800: Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X