என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் நிறங்கள் டோமினார் 250 பைக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

கிட்டத்தட்ட தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 பைக்குகளுக்கு ஒரே மாதிரியான நிறங்களை பஜாஜ் நிறுவனம் வழங்காமல் உள்ளது.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

பஜாஜ் டோமினார் 250 பைக் சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. டோமினார் 400 பிரபலமான பச்சை நிறத்திலும், பளபளப்பான கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

இந்த நிலையில் 400சிசி டோமினார் பைக்கின் நிறங்களில் டோமினார் 250 பைக்குகள் ஷோரூமை வந்தடைந்துள்ளன. ஆனால் இந்த ஷோரூம் இந்தியாவில் இல்லை, கொலோம்பியாவில். இது தொடர்பான படங்கள் நிக் ஜீக் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

இந்த படங்களை பார்ப்பவர்களுக்கு எது டோமினார் 250, எது டோமினார் 400 என்று உடனடியாக புலப்படாது. ஏனெனில் இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் இந்த படங்களில் காட்டப்படுவது அனைத்துமே டோமினார் 250 பைக்குகளாகும்.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

பைக்குகளின் பின்பக்கத்தில் ‘250' முத்திரையை பார்க்கலாம். இந்தியாவில் 250சிசி பஜாஜ் டோமினார் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.70 லட்சமாகவும், பெரிய டோமினார் 400 பைக்கின் விலை ரூ.2 லட்சமாகவும் உள்ளது.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

பஜாஜ் டோமினார் 250 பைக்கில் 248.8சிசி ஃப்யுல் இன்ஜெக்‌ஷன், லிக்யுடு கூல்டு, 1-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 26.63 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 23.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 37 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் உடன் டெலெஸ்கோபிக்கும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் உடன் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. டோமினார் 400 பைக்கில் 373சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

என்னங்க சொல்றீங்க... பச்சை நிறத்தில் பஜாஜ் டோமினார் 250 பைக்கா!! கருப்பு நிறத்தையும் பெற்றது!

இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 39 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதன் உடனும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
The Bajaj Dominar 250 Now Gets All The Colours Of The Dominar 400.
Story first published: Sunday, April 25, 2021, 21:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X