'ஓ.. இதுதான் அந்த மலிவு விலை வாகனமா'.. முதல் முறையாக தரிசனத்தை வழங்கிய பஜாஜின் புதிய இ-ஸ்கூட்டர்!
பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் புதிய இ-ஸ்கூட்டர் ஒன்று முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மறைப்புகளுடன் காட்சியளிக்கும் பஜாஜின் புதிய இ-ஸ்கூட்டரின் படம்
பல ஆண்டுகளுக்கு பின்னர் பஜாஜ் (Bajaj) நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கிய ஸ்கூட்டராக சேத்தக் எலெக்ட்ரிக் இருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் முக்கிய தயாரிப்பாக மோட்டார்சைக்கிள் (பைக்) உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது. பெரியளவில் நிறுவனம் ஸ்கூட்டர்கள் மீது கவனம் செலுத்தாத வண்ணம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே சேத்தக் இ-வாகனத்தை நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இன்னும் சில ஸ்கூட்டர் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பஜாஜ் தற்போது களமிறங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தகவல் இணையத்தின் வாயிலாக தற்போது வெளி வந்திருக்கின்றது. நிறுவனம் தற்போது விற்பனைக்கு வழங்கி வரும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் விலைக் குறைவான ஓர் மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக சமீப சில நாட்களாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த ஸ்கூட்டர் பற்றிய புகைப்படமே தற்போது இணையத்தில் வெளி வந்திருக்கின்றது. சேத்தக்கை விட விலை குறைவான இ-ஸ்கூட்டராக வரவிருக்கும் இப்புதிய மாடலுக்கு ஃப்ளூர் (Fluor) அல்லது ஃப்ளூயிர் (Fluir) என்ற ஏதேனும் ஓர் பெயர் வைக்கப்பட இருக்கின்றது. இது ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவேதான் இந்த மின்சார இருசக்கர வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மத்தியில் முழுமையான மறைப்புகளுடன் இ-ஸ்கூட்டர் அதன் தரிசனத்தை வழங்கியிருக்கின்றது. இதனை இன்ஸ்டாகிராம் பயனரான டுஷார்பவர்911 என்பவர் வெளியிட்டிருக்கின்றார். இந்த இ-ஸ்கூட்டர் குறித்த படம் வெளிவருவது இதுவே முதல் முறையாகும்.

அவர் வெளியிட்டிருக்கும் படத்தின் வாயிலாக ஸ்கூட்டர் பற்றிய சில முக்கிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. விற்பனையில் இருக்கும் சேத்தக் இ-ஸ்கூட்டரைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தை புதிய மின்சார ஸ்கூட்டர் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஸ்கூட்டருக்கான ஹெட்லைட் முன்பக்க ஏப்ரானில் இடம் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இதன் பின்புறம் சேத்தக்குடன் ஒப்பிடும்போது மிக சிறியதாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், ஸ்கூட்டருக்கான நம்பர் பிளேட் தாங்கி ஸ்விங்கார்ம் கொடுக்கப்பட இருப்பதும் ஸ்பை படத்தின் வாயிலாக தெரிகிறது. புனே நகர சாலையிலேயே இந்த ஸ்கூட்டர் தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கின்றது.

விலை குறைப்பிற்காக சில சிறப்பம்சங்கள் நீக்கப்பட்டு இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் பேட்டரி மற்றும் மின்மோட்டார் விஷயத்தில் சேத்தக் மற்றும் தற்போது ஸ்பைக்கு உள்ளாகி இருக்கும் மின்சார ஸ்கூட்டர் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரில் 3kWh IP67 ரேடட் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்களே போதுமானது.

மின்சார ஸ்கூட்டரில் பிரீமியம் தர அம்சங்களாக ரிவர்ஸ் அசிஸ்ட் மோட், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வதி, ஐபிஎம்எஸ் (Intelligent Battery Management System), எல்இடி மின் விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் நிறுவனம் இந்த சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த செப்டம்பர் மாதமே சென்னையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சேத்தக் இ ஸ்கூட்டர் அர்பன் மற்றும் பிரீமியம் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 1.41 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








