மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!

பஜாஜ் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மோட்டார்சைக்கிள்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதன்முதலாக டோமினார் 400 பைக்கை 2016ல் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் தற்போதைய பிஎஸ்6 வெர்சன் கடந்த 2020ஆம் ஆண்டு மத்தியில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த சமயத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!

400சிசி மாடலிற்கு அடுத்து டோமினார் 250 மாடல் கடந்த ஆண்டில்தான் அறிமுகமானது. பஜாஜ் டோமினார் 400-இன் ஆரம்ப விலை அறிமுகத்தின்போது வெறும் ரூ.1.60 லட்சமாகவே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த விலை அதிகரிப்பிற்கு முன்னரே இதன் விலை ரூ.1,97,758 ஆகும்.

மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!

ஏனெனில் இந்த 4 வருடங்களில் பல முறை இந்த 400சிசி பஜாஜ் டோமினார் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் இதன் விலை ரூ.1,997 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் டோமினார் 400 பைக்கை இனி ரூ.1,99,755 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில்தான் பெற முடியும்.

மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!

அதேபோல் சமீபத்திய அறிமுகமான டோமினார் 250 பைக்கின் விலையையும் பஜாஜ் நிறுவனம் அதிகரித்துள்ளது. எனக்கு தெரிந்தவரை இதுதான் இந்த 250சிசி பைக் ஏற்கும் முதல் விலை அதிகரிப்பாக இருக்க வேண்டும். ரூ.1,65,715-இல் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பைக்கின் விலையில் ரூ.2,003 அதிகரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!
Models New Price Old Price Premium
Dominar 400 ₹1,99,755 ₹1,97,758 ₹1,997
Dominar 250 ₹1,67,718 ₹1,65,715 ₹2,003

இதனால் இனி இந்த பஜாஜ் பைக்கின் விலை ரூ.1,67,718 ஆகும். ரூ.2 லட்சத்தை பஜாஜ் டோமினார் 400 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை எட்டி வருகிறது. இருப்பினும் தற்போதைக்கு பஜாஜ் டோமினார் பைக்கை ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைக்குள் வாங்கிடலாம்.

மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!

அதுவே பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு விற்பனை போட்டியாக உள்ள கேடிஎம் 390 ட்யூக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2,70,554-இல் இருந்து ஆரம்பிக்கிறது. இரண்டிற்கும் இடையே கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வித்தியாசம் உள்ளது.

மெல்ல ரூ.2 லட்சத்தை நெருங்கும் பஜாஜ் மலிவான 400சிசி பைக்!! இருந்தாலும் கேடிஎம்390 ட்யூக்கிற்கு எவ்வளவோ பரவால!

டோமினார் 250 பைக்கிற்கு போட்டியாக உள்ள கேடிஎம் 250 ட்யூக்கின் விலையே ரூ.2,17,402ஆக உள்ளது. மேலும் டோமினார் 400 பைக்கிற்கும் அதன் 250சிசி மாடலுக்கும் இடையே ஆரம்பத்தில் ரூ.30,000 வித்தியாசம் இருந்தது. அது இப்போது ரூ.32,000ஆக உள்ளது.

Most Read Articles

English summary
Bajaj Dominar 400, Dominar 250 Prices Hiked
Story first published: Thursday, January 14, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X