பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

பஜாஜ் நிறுவனம் அதன் முதன்முதல் மின்சார இருசக்கர வாகனமான சேத்தக் ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் சேத்தக். நீண்ட நாட்களுக்கு பிறகு நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கிய முதல் ஸ்கூட்டரும் இதுவே ஆகும். ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

இருப்பினும், நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே சேத்தக் மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், பெங்களூரு மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

இந்தநிலையில், மேற்கூறிய இரு நகரவாசிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பஜாஜ் நிறுவனம் சேத்தக் மின்சார ஸ்கூட்டரின் விலையை உயர்த்திருக்கின்றது. இதனால், பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்கின்றனர்.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

பஜாஜ் நிறுவனம் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை அர்பன் மற்றும் பிரீமியம் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், அர்பன் விலையில் ரூ. 5 ஆயிரமும், பிரீமியம் வேரியண்டின் விலையில் ரூ. 15 ஆயிரத்தையும் பஜாஜ் உயர்த்தியிருக்கின்றது. இதனால்தான் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

புதிய விலை பட்டியல்:

பஜாஜ் சேத்தக் அர்பன்: ரூ. 1,15,000

பஜாஜ் சேத்தக் பிரீமியம்: ரூ. 1,20,000

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

பஜாஜ் நிறுவனம் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனத்தின் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் ரூ. 1.08 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்து வருகின்றது.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

பஜாஜ் சேத்தக் ஓர் நியோ-ரெட்ரோ உருவத்திலான மின்சார ஸ்கூட்டராகும். இந்த கவர்ச்சியான உருவ அமைப்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும், இந்த ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலே நிறுவனம் இதன் விலையை அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

சேத்தக் மின்சார ஸ்கூட்டர் 3kWh IP67 தரத்திலான லித்தியம் அயன் பேட்டரியில் இயங்குகின்றது. இது 3.8kW திறன் வசதிக்கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

பெங்களூரு-புனே வாசிகளை அதிரடி முடிவால் உறைய வைத்த பஜாஜ்... இதை அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!!

ஈகோ மோடில் பயணிக்கும்போதே இந்த ரேஞ்ஜை நம்மால் பெற முடியும். அதிகவேகத்தில் பயணிக்கக் கூடிய ஸ்போர்ட் மோடில் சென்றால் 85 கிமீ ரேஞ்ஜை மட்டுமே நம்மால் பெற முடியும். இந்த ஸ்கூட்டரை 5 ஆம்பியர் பவர் கொண்ட சாக்கெட்டில் வைத்துகூட சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Increased Chetak Electric Scooter Prices In India; Here Is How Much Raised. Read In Tamil.
Story first published: Saturday, March 13, 2021, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X