புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

பஜாஜ் நிறுவனம் பல்சர் பைக்கில் புதிய 'டேக்கர் எட்ஜ்' பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

பஜாஜ் நிறுவனம் புதிய படைப்புகளின் வாயிலாக இந்தியர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் பல்சர் என்எஸ் 125 எனும் மாடலை களமிறக்கி இந்தியர்களை அதகளப்படுத்தியது. இந்த நிலையில், இதே பல்சர் வரிசையில் சிறப்பு பதிப்பு ஒன்றை இந்தியாவில் பஜாஜ் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

'டேக்கர் எட்ஜ்' (Dagger Edge) எனும் சிறப்பு பதிப்பை மோட்டார்சைக்கிளையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பதிப்பு பல்சர் 150, பல்சர் 180 மற்றும் பல்சர் 220எஃப் ஆகிய மூன்று மாடல்களிலும் கிடைக்கும். ஆமாங்க, மூன்று மாடல்களில் டேக்கர் எட்ஜ் சிறப்பு பதிப்பை பஜாஜ் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

'டேக்கர் எட்ஜ்' பதிப்பு என்றால் என்ன?

வழக்கமான பஜாஜ் பல்சர் பைக்குகள் இருக்கும் நிறத்தைக் காட்டிலும் மாறுபட்ட நிறம், ஸ்டிக்கர் மற்றும் கிராஃபிக்குகளைக் கொண்டே இந்த டேக்கர் எட்ஜ் பதிப்பு பல்சர் ஆகும். ஆகையால், இந்த சிறப்பு பதிப்பு பைக்குகளில் எந்த எஞ்ஜின் திறன் மாற்றமும் இருக்காது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

நிற தேர்வு:

பஜாஜ் பல்சர் 150 டேக்கர் பதிப்பு மோட்டார்சைக்கிள் இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டுமே மேட் ரக பெயிண்ட் பூச்சில் மட்டுமே கிடைக்கும். முத்து வெள்ளை மற்றும் குங்குமப்பூ நீலம் ஆகிய இரு நிற தேர்வை பல்சர் 150 டேக்கர் பதிப்பு கொண்டிருக்கின்றது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

இதில், முத்து வெள்ளை நிறத்தில் இரண்டாவது நிறமாக சிவப்பு வண்ணத்திலான ஹைலைட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மட்குவார்ட் மற்றும் ரிம்களில் இந்த நிறம் இடம் பெற்றிருக்கின்றது. மேலும், பைக்கின் இன்னும் ஒரு சில உடற்பகுதிகளிலும் இந்த இரு நிற கலவை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

இதேபோன்று, குங்குமப்பூ நீல நிற தேர்விலும் இரண்டாவது நிறமாக வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் வீல், மட்குவார்ட் மற்றும் குறிப்பிட்ட பேனல்களில் இடம்பெற்றிருக்கின்றது. 149.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 13.8 பிஎச்பி மற்றும் 13.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

பல்சர் 180; எரிமலை சிவப்பு மற்றும் பிரகாசமான கருப்பு ஆகிய இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் எரிமலை சிவப்பு நிறத்தில் இரண்டாம் நிறமாக வெள்ளை-கருப்பு நிறத்திலான கிராஃபிக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

இதேபோன்று, பிரகாசமான கருப்பு நிற தேர்வில் சிவப்பு நிற கிராஃபிக்குகள் மற்றும் ஹைலைட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பைக்கில், 178.6 சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இிது அதிகபட்சமாக 16.8 பிஎச்பி மற்றும் 14.52 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

பல்சர் 220எஃப் மேலே பார்த்த அனைத்து நிறங்களையும் இப்பைக்கில் பஜாஜ் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஆகையால், பஜாஜ் பல்சர் 220 எஃப் டேக்கர் பதிப்பு பைக் நான்கு விதமான வண்ணத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

இப்பைக்கில் 220 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.1 பிஎச்பி மற்றும் 18.55 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

புதிய 'டேக்கர் எட்ஜ்' பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இந்திய இளைஞர்களை கவர பஜாஜ் அதிரடி!

புதிய டேக்கர் எடிசன் பல்சர் பைக்குகளின் விலை பட்டியல்:

பல்சர் 150 : ரூ. 1,01,818

பல்சர் 150 ட்வின் டிஸ்க் : ரூ. 1,04,819

பல்சர் 180 : ரூ. 1,09,651

பல்சர் 220எஃப் : ரூ. 1,28,250

Most Read Articles

English summary
Bajaj Launched New Dagger Edge Edition Pulsar In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X