பல்சர் வரிசையில் 250சிசி மாடல்களை களமிறக்கும் பஜாஜ்... டோமினார் 250 பைக்கைவிட விலை குறைவாக இருக்கும்!
டோமினார் 250 பைக்கைவிட புதிய 250சிசி பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. ஆவலை ஏற்படுத்தும் இந்த புதிய தகவல் குறித்த விரிவான விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, பல்சர் வரிசையில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், பல்சர் வரிசையில் சக்திவாய்ந்த புதிய மாடல்களை கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக பைக்வாலே தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான என்எஸ் மற்றும் ஆர்எஸ் வரிசையில் இந்த புதிய 250சிசி மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கேடிஎம் ட்யூக் 250 மற்றும் பஜாஜ் டோமினார் 250 மாடல்களில் பயன்படுத்தப்படும் 248.8சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த மாடல்களிலும் இடம்பெறும்.

இந்த 250சிசி எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 23.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பானதாக இருக்கும்.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 250 மற்றும் ஆர்எஸ்250 பைக் மாடல்களில் ஸ்லிப்பர் க்ளட்ச், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர அம்சமாக இடம்பெறும். முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும்.

பஜாஜ் பல்சர் என்எஸ்250 மற்றும் ஆர்எஸ்250 பைக் மாடல்கள் ரூ.1.60 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், பஜாஜ் டோமினார் 250 மற்றஉம் கேடிஎம் ட்யூக் 250 பைக் மாடல்களைவிட குறைவான விலையில் வரும். இந்த ஆண்டிலேயே இந்த மாடல்கள் விற்பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

இதுதவிர்த்து, பல்சர் ஏஎஸ் 250 அட்வென்ச்சர் பைக் மாடலை உருவாக்கும் பணிகளும் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், 250சிசி பைக் மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோ மிக வலுவான வர்த்தகத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








