இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

யாராலும் கண்டே பிடிக்க முடியாத தோற்றத்திற்கு பஜாஜ் பல்சர் 150 பைக் ஒன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

2001ல் இருந்து விற்பனையில் இருக்கும் பஜாஜ் பல்சர் 150 பைக் இத்தனை வருடங்களில் பல முறை திருத்தியமைப்புகளையும், அப்டேட்களையும் ஏற்றுள்ளது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

இதனால் மலிவான விலை மற்றும் செயல்திறனிற்கு இடையே பிரபலமான பெயர் பலகையாக பஜாஜ் பல்சர் விளங்குகின்றது. அதுமட்டுமின்றி மாடிஃபை பைக் பிரியர்களின் மத்தியிலும் பல்சர் பைக்குகளுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

ராயல் என்பீல்டு பைக்குகளை போன்று இவற்றை மாடிஃபை செய்வதும் மிக எளியது என்பதால், அவ்வப்போது மாடிஃபை செய்யப்பட்ட பல்சர் பைக்குகளை பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வகையில் கேரளாவை சேர்ந்த மோட்டோ மஹால் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் மூலமாக மாற்றப்பட்ட பல்சர் 150 பைக்கை பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

நைட்ரோ ஸ்ட்ரீட் என்ற அழைக்கப்படும் இந்த மாடிஃபை பல்சர் 150 பைக்கில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் எந்த பைக்கில் இருந்து இவ்வாறான பைக் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே கஸ்டமைஸ்ட் நிறுவனம் கூறி தான் நமக்கே தெரிய வருகிறது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

சந்தைக்கு பிறகான எல்இடி ஹெட்லைட்டை முன்பக்கத்தில் பெற்றுள்ள இந்த பைக் கேடிஎம் நிறுவனத்தின் தங்க நிறத்திலான யுஎஸ்டி ஃபோர்க்குகளையும் முன்பக்க டிஸ்க் & காலிபர் உடன் ஏற்றுள்ளது. அதேபோல் இரு முனைகளிலும் கண்ணாடிகளை கொண்ட க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

பல்சர் 150 பைக்கில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் நீக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க் ராயல் என்பீல்டு ஹிமாலயனில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இறுதி முனையில் ஃபைபர்க்ளாஸ் கௌல்-ஐ பெற்றுள்ள இந்த மாடிஃபை பல்சர் 150 பைக்கில் இருக்கை அமைப்பும் புதியது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

பின்பக்க ஃப்ரேம், கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பின்பக்க ஷாக்கர்களும் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் டெயில்லைட்டை கொண்டில்லாத இந்த மாடிஃபை பைக்கில் அலாய் சக்கரங்கள் கேடிஎம் பைக் ஒன்றில் இருந்து எடுத்து பொருத்தப்பட்டுள்ளன.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

என்ஜினில் இருந்து செல்லும் சங்கிலியை பாதுகாக்கும் தகடு அமைப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைய பாடி பேனலும் நீக்கப்பட்டுள்ளதால் பைக்கின் மைய பகுதியில் பெரிய அளவில் வெற்றிடம் தெரிகிறது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

இது பல்சர் 150 பைக் என்பதற்கு மிக முக்கிய ஆதாரமாக 150சிசி, கார்புரேட்டட், ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அப்படியே தொடரப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மாடல் 2003ல் வாங்கப்பட்ட பல்சர் 150 பைக்காகும். அந்த சமயத்தில் தான் டிடிஎஸ்-ஐ தொழிற்நுட்பத்தை பல்சர் பைக்குகளில் பஜாஜ் நிறுவனம் வழங்க துவங்கியது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டே பிடிக்க முடியாது!! கேரளாவில் நடந்துள்ள மாடிஃபிகேஷனின் உச்சம்!

இருப்பினும் கே&என் காற்று வடிக்கட்டி மற்றும் அக்ராபோவிக் இரட்டை-பேரல் எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு உள்ளிட்டவை உறுமும் சத்தத்திற்காக இந்த மாடிஃபை பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. என்ன தான் மூளையை குடாய்ந்து இவ்வாறான மாடிஃபை பைக்குகளை உருவாக்கினாலும், இவை சட்டத்திற்கு புறமான வாகனங்களே ஆகும்.

Most Read Articles
English summary
Bajaj Pulsar 150 Transformed Into Mean-Looking Cafe Racer. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X