பல்சர் 220எஃப் பைக்கின் வரிசையில் 250எஃப் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்!! பைக் கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்...

பஜாஜ் பல்சர் 250எஃப் பைக் முதன்முறையாக சாலையில் மறைப்புகளுடன் காட்சி தந்துள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல்சர் 220எஃப் பைக்கின் வரிசையில் 250எஃப் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்!! பைக் கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்...

பஜாஜ் நிறுவனம் அதன் பல்சர் பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பஜாஜ் பல்சர் 250 நாக்டு மோட்டார்சைக்கிள் ஒன்றின் ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன.

பல்சர் 220எஃப் பைக்கின் வரிசையில் 250எஃப் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்!! பைக் கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்...

அதனை தொடர்ந்து தற்போது முதன்முறையாக அந்த 250சிசி நாக்டு மோட்டார்சைக்கிளின் பேனல்களால் சற்று-நிரப்பட்ட வெர்சன் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

பல்சர் 220எஃப் பைக்கின் வரிசையில் 250எஃப் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்!! பைக் கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்...

பஜாஜின் 180- 180எஃப் பைக்குகளை போன்று இந்த 250சிசி பைக்குகளும் பல்சர் 250- 250எஃப் என அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைக்வாலே செய்திதளம் மூலம் கிடைத்துள்ள தற்போதைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பைக் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

பல்சர் 220எஃப் பைக்கின் வரிசையில் 250எஃப் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்!! பைக் கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்...

இருப்பினும் இந்த பல்சர் பைக்கின் தோற்றம் இவ்வாறுதான் இருக்கும் என்பதை நம்மால் ஓரளவிற்கு அறிய முடிகிறது. முன்பக்கத்தில் ஹெட்லைட்டையும், பெட்ரோல் டேங்கையும் இரு பக்கத்திலும் பேனல்கள் இணைக்கின்றன, ஆனால் ஹெட்லைட்டை சுற்றிலும் அதிகளவில் பேனல்கள் இல்லை.

பல்சர் 220எஃப் பைக்கின் வரிசையில் 250எஃப் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்!! பைக் கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்...

இதனால் தான் இந்த பைக் பேனல்களால் சிறிது-நிரப்பப்பட்ட வெர்சன் என அழைக்கப்படுகிறது. பல்சர் 220எஃப் பைக்குகளை போன்று இந்த பைக்கிலும் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் முன்பக்க டூமில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை பைக்கின் பின்பகுதி கிட்டத்தட்ட முன்னதாக அடையாளம் காணப்பட்ட நாக்டு 250 பைக்கை தான் ஒத்து காணப்படுகிறது. மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால், பின்பக்க ஹெட்லைட்டின் டிசைன் வேறுபடுமா என்பதை அறிய முடியவில்லை.

பல்சர் 220எஃப் பைக்கின் வரிசையில் 250எஃப் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்!! பைக் கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்...

ஏனெனில் இந்த இரு 250சிசி பைக்குகளும் பின்பக்க தோற்றத்தில் வேறுபடுவதற்கு டெயில்லைட்டின் டிசைனில் வேறுபாடுகள் கொண்டுவரப்படலாம். பஜாஜின் 250சிசி பைக்குகளில் அலாய் சக்கரங்கள், டிஸ்க் ப்ரேக்குகள், அளவில் சிறியதான எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்படவுள்ளன.

இவற்றில் பொருத்தப்படவுள்ள 250சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 24 பிஎச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தக்கூடியதாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இருக்கும். பஜாஜ் பல்சர் 250எஃப் பைக்கிற்கு சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 போட்டியாக விளங்கும்.

Most Read Articles
English summary
Bajaj Pulsar 250F semi-faired version spied for the first time.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X