பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

புதிய தலைமுறை பல்சர் 250 பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

பல்சர் வரிசையை மேலும் பலப்படுத்தும் விதமாக பல்சர் 250 பைக்குகளின் தயாரிப்பு பணிகளில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாகவே தற்போது என்எஸ்250 பைக்கின் இந்த சோதனை ஓட்டம் புனேக்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

பைக்வாலே செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் சில திருத்தியமைக்கப்பட்ட பாகங்களினால் பல்சர் என்எஸ்250 பைக் சற்று மேம்படுத்தப்பட்ட காற்று இயக்கவியலுக்கு இணக்கமான தோற்றத்தை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

எப்படியிருந்தாலும் தற்போதைய என்எஸ்200 பைக்கை காட்டிலும் பெரிய தோற்றம் கொண்டதாகவே புதிய என்எஸ்250 பைக் இருக்கும். இந்த சோதனை என்எஸ்250 பைக் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பாகங்கள் வெவ்வேறான பைக்குகளில் இருந்து பெறப்பட்டுள்ளதை யூகிக்க முடிகிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

அதேபோல் இந்த பஜாஜ் பல்சர் பைக்கில் எல்இடி விளக்குகளையும் எதிர்பார்க்கலாம். மேலும், என்எஸ்200 பைக் பெறுவதை போல் லிக்யூடு-கூல்டு என்ஜின் அல்லாமல் ஆயில்-கூல்டு என்ஜின் என்எஸ்250 பைக்கில் பொருத்தப்படலாம்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

இதில் இருந்து இந்த 250சிசி பைக்கை பஜாஜ் நிறுவனம் பணத்திற்கு ஏற்ற வாகனமாக வழங்க பணியாற்றிவதை அறிய முடிகிறது. நமக்கு தெரிந்தவரையில் இதில் அதிகப்பட்சமாக 24 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் என்ஜின் வழங்கப்படலாம்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

அதேநேரம் புதிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய என்எஸ்250 பைக்கில் முன் மற்றும் பின்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு வழங்கப்படலாம்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் 250 பைக்கை வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம். இதன் விலை கேடிஎம் 250சிசி பைக்குகளுக்கு இணையான அளவிற்கு இல்லாமல் தற்போதைய என்எஸ்200 பைக்கை காட்டிலும் சிறிது அதிகமாகவே நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Next generation Bajaj Pulsar 250 spotted testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X