வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

இளைஞர்களின் மத்தியில் பிரபலமான பஜாஜ் பல்சர் என்எஸ்200 மோட்டார்சைக்கிளில் வீலிங்கில் இந்திய அளவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

இஇந்தியாவில் இளம் தலைமுறையினரின் ஃபேவரட் நாக்டு மோட்டார்சைக்கிளுள் ஒன்றாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்எஸ்200 விளங்குகிறது. ரூ.1.30 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த 200சிசி பைக்கை விளம்பரப்படுத்துவதில் பஜாஜ் நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

இந்த வகையிலும், என்எஸ்200 பைக்கின் திறனை வாடிக்கையாளர்களுக்கு நிரூப்பிக்கும் நோக்கிலும் என்எஸ்200 பைக்கில் வீலிங் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. இந்திய கின்னஸ் புத்தகம் மற்றும் இந்திய மோட்டார் விளையாட்டுக் கழகங்களின் கூட்டமைப்பின் தேசிய சாதனையில் இடம்பிடித்துள்ள இந்த வீலிங் சாதனையில் என்எஸ்200 பைக் சுமார் 1/4 மைல் தூரத்திற்கு வீலிங்கிலேயே இயக்கப்பட்டுள்ளது.

வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

இந்த தூரத்திற்கு வேறு சில பைக்குகளிலும் வீலிங் செய்யப்பட்டிருப்பினும், வெறும் 23.68 வினாடிகளில் இது செய்து முடிக்கப்பட்டிருப்பது தான் இதில் சாதனையாக பார்க்க முடிகிறது. இதன் மூலமாக ‘அதிவேகமான குவார்டர்-மைல் வீலிங்' பைக் என்ற பெயரை பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் பெற்றுள்ளது.

வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

ஹ்ருஷிகேஷ் மாண்ட்கே என்ற ஓட்டுனரின் மூலம் இந்திய மோட்டார் விளையாட்டுக் கழகங்களின் கூட்டமைப்பின் முதன்மை பிரதிநிதிகள் மற்றும் இந்திய கின்னஸ் புத்தக சாதனைக்கான தீர்ப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் இந்த சாதனை கைவிடப்பட்ட விமான ஓடுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

அனைத்து விதமான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்ட இந்த சாதனை நிகழ்வில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படும் பல்சர் என்எஸ்200 பைக் எந்தவொரு கூடுதல் தொழிற்நுட்ப வசதிகளும் இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வீலிங்கிற்காக பின்பக்கத்தில் மட்கார்ட் மற்றும் நம்பர் ப்ளேட் பொருத்தப்படும் பகுதி நீக்கப்பட்டுள்ளது.

வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

பல்சர் பைக்குகளின் செயல்திறனின் மீதும், அவற்றின் பாதுகாப்பின் மீதும் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு என ரைடர் ஹ்ருஷிகேஷ் மாண்ட்கே தெரிவித்துள்ளார். பல்சர் என்எஸ்200 பைக்கில் 199சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு ட்ரிபிள்-ஸ்பார்க் டிடிஎஸ்-ஐ என்ஜின் பொருத்தப்படுகிறது.

வீலிங்கில் புதிய இந்திய சாதனை படைத்த பல்சர் என்எஸ்200 பைக்!! பஜாஜின் தயாரிப்பே தயாரிப்பு தான்!

அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 24.5 பிஎச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 18.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்எஸ்200 மட்டுமின்றி ஆர்எஸ்200 பைக்கிலும் 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக புதிய நிறத்தேர்வுகளை பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Bajaj Pulsar NS200 creates a record for fastest quarter mile wheelie.
Story first published: Thursday, March 11, 2021, 19:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X