இந்தியா மட்டும் இல்லைங்க, வெளிநாடுகளிலும் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!!
பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1,28,642 யூனிட் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளளது. அதுவே 2019 டிசம்பரில் 1,24,125 பஜாஜ் பல்சர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதில் பல்சர் பைக்குகளின் பங்குதான் அதிகமாக உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 7 பல்சர் பைக்குகளை தற்சமயம் விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலைகள் ரூ.71,616-ல் (பல்சர் 125) இருந்து ரூ.1,52,179 (ஆர்எஸ்200) வரையில் உள்ளன.

75,421 யூனிட்கள் கடந்த மாதம் விற்பனையான பல்சர் பைக்குகளின் விற்பனை 48.08 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏனெனில் 2019 டிசம்பர் மாதத்தில் வெறும் 50,931 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் 2020 நவம்பரில் 1,04,904 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பல்சர் பைக்குகளின் விற்பனை 28.10 சதவீதம் குறைந்துள்ளது. பல்சர் 125 பைக்கை பொறுத்தவரையில், இதன் விற்பனை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 183.03 சதவீதம் அதிகரித்துள்ளது.

| Pulsar Sales | Dec-20 | Dec-19 | Growth (%) YoY |
| 125 | 42,686 | 15,082 | 183.03 |
| 150 | 19,958 | 26,778 | -25.47 |
| 16, 180, 200 | 8,279 | 5,223 | 58.51 |
| 200F | 4,498 | 3,848 | 16.89 |
| Total | 75,421 | 50,931 | 48.08 |
| Pulsar Sales | Dec-20 | Nova-20 | Growth (%) MoM |
| 125 | 42,686 | 56,549 | -24.52 |
| 150 | 19,958 | 30,719 | -35.03 |
| 160, 180, 200 | 8,279 | 10,522 | -21.32 |
| 200F | 4,498 | 7,114 | -36.77 |
| Total | 75,421 | 1,04,904 | -28.10 |
ஆனால் பல்சர் 150 பைக்குகளின் விற்பனை 25.47 சதவீதம் சரிந்துள்ளது. பல்சர் 160, 180, 200 பைக்குகளின் விற்பனை 58.51 சதவீதமும், பல்சர் 220எஃப் பைக்கின் விற்பனை 16.89 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் 2020 டிசம்பரில் மொத்தம் 75,421 பல்சர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன.

ஆனால் 2019 டிசம்பரில் 50,931 யூனிட் பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த எண்ணிக்கை 48.08 சதவீதம் அதிகமாகும். ஆனால் 2020 நவம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை அனைத்து பிரிவுகளிலும் கணிசமாக குறைந்துள்ளது.

இதற்கு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை மிக முக்கிய காரணமாக சொல்லலாம். வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியை பொறுத்தவரையில் கடந்த மாதத்தில் மொத்தம் 36,844 பல்சர் பைக்குகளை இந்தியாவில் இருந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

| Pulsar Exports | Dec-20 | Dec-19 | Growth (%) YoY |
| 160, 180, 200 | 15,573 | 13,312 | 16.98 |
| 150 | 14,043 | 7,008 | 100.39 |
| 125 | 4,555 | 2,916 | 56.21 |
| 200F | 2,673 | 1,108 | 141.25 |
| Total | 36,844 | 24,344 | 51.35 |
| Pulsar Exports | Dec-20 | Nova-20 | Growth (%) MoM |
| 160, 180, 200 | 15,573 | 14,198 | 9.68 |
| 150 | 14,043 | 11,112 | 26.38 |
| 125 | 4,555 | 5,820 | -21.74 |
| 200F | 2,673 | 1,410 | 89.57 |
| Total | 36,844 | 32,540 | 13.23 |
இந்த எண்ணிக்கை 2019 டிசம்பர் மாதத்தை காட்டிலும் சுமார் 51.35 சதவீதமும், 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 13.23 சதவீதமும் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதங்களில் முறையே 24,344 மற்றும் 32,540 பல்சர் பைக்குகளே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.


Click it and Unblock the Notifications








