மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோவின் கடந்த 2021 அக்டோபர் மாத உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கிட்டத்தட்ட 26.62% குறைந்துள்ளது. அதேபோல் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியும் 4.03% சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் 1,91,607 யூனிட் இருசக்கர வாகனங்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் தான் 26.62% குறைவாகும்.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,61,115 இருசக்கர வாகனங்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்திலும் வழக்கம்போல் பல்சர் பைக்குகளையே அதிகளவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மொத்தம் 86,500 யூனிட் பல்சர் பைக்குகளை பஜாஜ் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020 அக்டோபரில் பல்சர் பைக்குகளின் விற்பனை 1 லட்சத்தை கடந்து 1,38,218 யூனிட்களாக இருந்தது.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

இந்த வகையில் பல்சர் பைக்குகளின் விற்பனை கிட்டத்தட்ட 37.42% குறைந்துள்ளது. இதற்கடுத்து பிளாட்டினா பைக்குகள் 84,109 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் பிளாட்டினா பைக்குகளின் விற்பனை 2020 அக்டோபரை காட்டிலும் 37.96 அதிகரித்துள்ளது. ஏனென்றால், அந்த மாதத்தில் ஏறக்குறைய 61 ஆயிரம் பிளாட்டினா பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

ஆனால் மறுபக்கம் பஜாஜ் சிடி பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், 2020 அக்டோபரில் 51,052 சிடி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் சுமார் 64.58% குறைவாக 18,084 சிடி பைக்குகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்தியாவின் மலிவான பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் சிடி மாடல் தான் பஜாஜின் கடந்த மாத விற்பனை லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

சிடி பைக்கின் விற்பனையாவது பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதற்கடுத்துள்ள அவெஞ்சர் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை சுமார் 86% கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் சரிந்துள்ளது. ஏனெனில் 2020 அக்டோபரில் 7,052 அவெஞ்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 987 யூனிட்களே விற்கப்பட்டுள்ளது.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

இந்தியாவின் மலிவான க்ரூஸர் பைக்காக பஜாஜ் அவெஞ்சர் தான் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டோமினார் பைக்குகளின் விற்பனையும் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,092 டோமினார் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் 2020 அக்டோபரில் 3,568 டோமினார் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

இந்த வகையில் டோமினார் பைக்குகளின் உள்நாட்டு விற்பனை 69.39% குறைந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த விற்பனை லிஸ்ட்டில் வழக்கம்போல் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் சேத்தக்கின் விற்பனை சுமார் 223.64% உயர்ந்துள்ளது. 2020 அக்டோபரில் 258 சேத்தக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 835 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

இந்த வகையில் இந்தியாவில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை மும்மடங்காகி உள்ளது. இதே கடந்த ஆண்டு இறுதி மாதங்களில் குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியாமல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பெரிய அளவில் தடுமாறியது. ஆனால் இந்த நிலை சமீப மாதங்களாக கவனிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

இதன் காரணமாக மீண்டும் டிவிஎஸ் ஐக்யூப் போன்ற தனது போட்டி மாடல்களை விற்பனையில் சேத்தக் முந்தியுள்ளது. அப்படியே வெளிநாட்டு சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் இருசக்கர வாகனங்களுக்கு வந்தோமேயானால், பஜாஜின் வெளிநாட்டு ஏற்றுமதி கடந்த மாதத்தில் 4.03% குறைந்துள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். பஜாஜ் ஆட்டோவின் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கும் மாடலை பலரால் யூகிக்க முடியாது.

மீண்டும் சரிவில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை!! சேத்தக் இ-ஸ்கூட்டரின் விற்பனையில் முன்னேற்றம்!

ஏனெனில் நம் நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் பஜாஜ் 2-வீலர்ஸான பல்சர் பைக்குகள் இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்திலேயே உள்ளது. முதலிடத்தை பாக்ஸர் என்கிற மோட்டார்சைக்கிள் உள்ளது. பல வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமான பஜாஜ் தயாரிப்பாக விளங்கும் இதனை கடந்த மாதத்தில் மொத்தம் 1,15,944 யூனிட்கள் இந்தியாவில் தயாரித்து பஜாஜ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 27, 2021, 11:59 [IST]
English summary
Bajaj sales breakup oct 2021 pulsar regains lead
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+