குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் சென்னையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் மின்சார ஸ்கூட்டர் மாடலை சந்தைக்கு கொண்டு வந்தது. தனது பழைய சேத்தக் பெயரை இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூட்டியது. மிக அருமையான டிசைன், போதுமான ரேஞ்ச் மற்றும் விலையில் வந்த இந்த ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

முதல்கட்டமாக புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்த ஸ்கூட்டரை பிற நகரங்களில் அறிமுகம் செய்யும் திட்டத்தை பஜாஜ் ஆட்டோ தாமதப்படுத்தி வருகிறது.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த நிலையில், விரைவில் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு நகரங்களிலும் தனது சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மேலும், சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களை சேர்ந்த விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு விருப்பப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆனால், எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற உறுதியானத் தகவல் இல்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 4.1kW பவரை வழங்க வல்ல மின் மோட்டார் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஈக்கோ மோடில் 95 கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் 85 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அண்மையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சாஃப்ட்வேர் அப்டேட் வழங்கப்பட்டது. இதன்மூலமாக, எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பது குறித்த துல்லியமான தரவுகளை பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது.

குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பன் மற்றும் பிரிமீயம் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்புகிறது. அர்பன் வேரியண்ட் ரூ.1.42 லட்சத்திலும், பிரிமீயம் வேரியண்ட் ரூ.1.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

English summary
Bajaj is all set to launch chetak electric scooter in Chennai and Hyderabad soon.
Story first published: Saturday, April 17, 2021, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X