இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பஜாஜ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

இந்தியாவை மையமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பஜாஜ், மிக விரைவில் இரு புதிய வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் இரு புதுமுக வாகனங்களுக்கான வர்த்தக உரிமத்தை பெற்றிருப்பதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

நிறுவனம் ஃப்ளூர் (FLUOR) மற்றும் ஃப்ளூயிர் (FLUIR) என்ற இரு பெயர்களை தற்போது பதிவு செய்திருக்கின்றது. இந்த இரு பெயர்களும் நிறுவனத்தின் எதிர்கால மின்சார வாகனங்களுக்கானதாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை பஜாஜ் தரப்பில் இருந்து கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

பஜாஜ் கடந்த இரண்டாம் மாதமே இவ்விரு பெயர்களையும் பதிவு செய்திருக்கின்றது. ஆனால், இப்போதே நிறுவனத்தின் நடவடிக்கைக்குறித்த தகவல் வெளிவர தொடங்கியிருக்கின்றது. ஆகையால், பஜாஜ் மிக ரகசியமாக அதன் எதிர்கால தயாரிப்புகளை உருவாக்கி வருவதாக மிக தெளிவாகத் தெரிகின்றது.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

அதேசமயம், பஜாஜ் நிறுவனம் இந்த புதிய பெயர்களில் மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் இந்திய வாகனச் சந்தையில் மிக உறுதியான தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால் நிச்சயம் இப்பெயரில் எரிபொருளில் இயங்கும் வாகனத்தை எதிர்பார்க்க வேண்டாம் கூறப்படுகின்றது.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

பஜாஜ் நிறுவனம் நீண்ட நாள் இடைவெளிக்கு பின்னர் ஸ்கூட்டர் உற்பத்தியில் தற்போதே ஈடுபட தொடங்கியிருக்கின்றது. இதற்காக தனது பழம்பெரும் தயாரிப்பான சேத்தக்கின் பெயரை நிறுவனம் பயன்படுத்தி வருகின்றது. இதுவே, பல ஆண்டுகளுக்கு பின்னர் பஜாஜ் அறிமுகப்படுத்திய ஸ்கூட்டர் ஆகும். இதனை மின்சார வெர்ஷனிலேயே நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

பஜாஜ் நிறுவனம் மோட்டார்சைக்கிள் (பைக்) தயாரிப்பை மட்டுமே முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கி வருகின்றது. ஸ்கூட்டர் தயாரிப்பில் பெரியளவில் நிறுவனம் ஈடுபாடு செலுத்துவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் காரணத்தினாலும் தற்போது பதிவு செய்யப்பட்டிருக்கும் இரு பெயர்களும் மின்சார மோட்டார்சைக்கிளுக்கானதாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அநேகர் மத்தியில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல் பெரிதும் ஆர்வத்தை தூண்டியிருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் மற்றும் பிற முக்கிய தயாரிப்புகளை 2021 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து வருகின்றது.

இரு புதிய வாகனங்களுக்கான பெயர்களை பதிவு செய்தது பஜாஜ்... என்ன வாகனமா இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!

ஆகையால், புதுமுக மாடல்களுடன் சேர்த்து ஏற்கனவே விற்பனையில் பைக்குகளை புதிய வெர்ஷனாக விற்பனைக்குக் கொண்டு வரும் பணியிலும் பஜாஜ் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, யமஹா எஃப்இசட்25 மற்றும் சுசுகி ஜிக்ஸெர் 250 பைக்குகளுக்கு போட்டியளிக்கும் பல்சர் 250 மாடலை களமிறக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
Bajaj Trademarked Fluor And Fluir Names In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X