2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் புதிய நிறங்களில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போது இந்த 200சிசி பல்சர் பைக் அறிமுகமாகும் என்பது உள்ளிட்ட தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

தென் கிழக்கு ஆசியாவில் உள்ள முக்கியமான சந்தைகளில் மலேசியாவும் ஒன்று. இதனால் உலகளவில் விற்பனைக்கு வெளியிடப்படும் வாகனத்தை மலேசியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றன.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

இந்த வகையில் தான் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கை மலேசியா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் கடந்த 2017ல் இருந்து இந்த 200சிசி பல்சர் பைக் விற்பனையில் உள்ளது.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

அப்போதில் இருந்து இத்தனை வருடங்களில் ஆர்எஸ்200 பைக்கிற்கு குறிப்பிடத்தக்க அளவிலான வாடிக்கையாளர் பட்டாளம் சேர்ந்துள்ளது. இந்தியாவில் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக உள்ளது.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

ஆனால் மலேசிய நாட்டு சந்தையில் புதிய ஆர்எஸ்200 பைக்கின் ஆரம்ப விலை 9,990 ஆர்எம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.74 லட்சம் ஆகும். 2021 ஆர்எஸ்200 பைக்கிற்கு மூன்று விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

இதில் பேர்ல் மெட்டாலிக் வெள்ளை, வெள்ளியம் & காரியத்தின் க்ரே மற்றும் சிவப்பு என்பவை அடங்குகின்றன. இதில் வெள்ளை மற்றும் க்ரே நிறத்தேர்வுகளில் பைக் பளபளப்பாக ஃபினிஷ் செய்யப்பட்டும், சிவப்பு நிறத்தேர்வு பளபளப்பில்லாத வகையிலும் ஃபினிஷ் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

இந்த மூன்று நிறத்தேர்வுகளிலும் அலாய் சக்கரங்கள் வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் கூடுதலாக மோட்டார்சைக்கிளின் ப்ரீமியத்திற்காக முன் மற்றும் பின்பக்க ஃபெண்டர்களில் ஃபாக்ஸ் கார்பன்-ஃபைபர் ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

‘பல்சர்' லோகோ ஆங்கிலத்தில் இருக்கை கவர்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பெயிண்ட் தேர்வுகளை தவிர்த்து பைக்கின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி வழக்கமான 199.5சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் 2021 பல்சர் ஆர்எஸ்200 பைக்கிலும் தொடரப்பட்டுள்ளது.

2021 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம்!! இந்தியாவில் எப்போது?

ட்ரிபிள் ஸ்பார்க் ப்ளக்குகள், 4 வால்வுகள் மற்றும் எலக்ட்ரானிக் ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்தை பெறும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9750 ஆர்பிஎம்-ல் 24.5 பிஎஸ் மற்றும் 8000 ஆர்பிஎம்-ல் 18.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 Bajaj Pulsar RS200 launched with new colours in Malaysia. India next?
Story first published: Sunday, March 28, 2021, 23:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X