இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் டிஆர்கே502எக்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பெனெல்லி இந்தியா நிறுவனம் புதிய பெயிண்ட் தேர்வை இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பிராண்டான பெனெல்லி சமீபத்தில் தான் அதன் மலிவான அட்வென்ச்சர் பைக்காக டிஆர்கே251-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ரூ.2.51 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அட்வென்ச்சர் பைக்கின் அறிமுகத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெனெல்லி புதிய டீசர் வீடியோ ஒன்றை அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருந்தது.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

மிகவும் சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக இருந்த இந்த டீசர் வீடியோ பெனெல்லியின் 500சிசி அட்வென்ச்சர் பைக்கான டிஆர்கே502எக்ஸ்-ஐ குறிப்பதாக அமைந்திருந்திருந்தது. ஆனால் அந்த வீடியோவின் மூலம் எத்தகைய அப்டேட்டை டிஆர்கே502எக்ஸ் பைக்கில் இந்த நிறுவனம் கொண்டுவர உள்ளது என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

டிஆர்கே800 பைக் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதா? அல்லது டிஆர்கே502எக்ஸ் பைக்கில் அப்டேட் செய்யப்பட்ட புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரா? என ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் பதிவில் எழுப்பி இருந்தனர். இந்த கேள்விகள் அனைத்திற்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. ஆம், டிஆர்கே502எக்ஸ் பைக்கை அட்வென்ச்சர் மஞ்சள் என்கிற புதிய பெயிண்ட் தேர்வில் பெனெல்லி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

பெயருக்கு ஏற்ப, இந்த புதிய நிறத்தேர்வில் பைக் முழுவதுமாக பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி பைக்கின் தோற்றத்தில் வேறெந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இந்த 500சிசி அட்வென்ச்சர் பைக் ஏற்கனவே மெட்டாலிக் டார்க் க்ரே, சிவப்பு மற்றும் தூய்மையான வெள்ளை என்கிற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

இந்த அட்வென்ச்சர் பைக்கின் முற்றிலுமாக சாலை-சார்ந்த வெர்சனும் டிஆர்கே502 என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவதை இந்த இடத்தில் கூறிக்கொள்கிறோம். இந்த வகையில் பெனெல்லியின் டிஆர்கே502 ரேஞ்சில் இரண்டாவது மோட்டார்சைக்கிளாக விளங்கும் டிஆர்கே502எக்ஸ்-இல் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு என்றே பிரத்யேகமான தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

இந்த ஆஃப்-ரோடு தொகுப்பில் கை விரல்கள் பாதுகாப்பான், பருத்த பெட்ரோல் டேங்க், இரும்பு ட்ரெல்லிஸ் சட்டகம், இரட்டை-பேட் ஹெட்லைட் அமைப்பு, பிளவுப்பட்ட ஸ்டைலில் இருக்கைகள், பெரிய அளவிலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, செமி-ஃபையரிங் டிசைன், வயர்-ஸ்போக் சக்கரங்கள் மற்றும் உயரத்தில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

டிஆர்கே502 & டிஆர்கே502எக்ஸ் என்ற இரு பெனெல்லி பைக்குகளிலும் ஒரே மாதிரியான, பிஎஸ்6-க்கு இணக்கமான 500சிசி இணையான-இரட்டை என்ஜினே பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 47.5 பிஎஸ் மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 46 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

பிரேக்கிங் பணியை கவனிக்க டிஆர்கே502எக்ஸ் பைக்கில் 320மிமீ-இல் இரட்டை, பெடல்-வகை ரோட்டார்கள் முன்பக்கத்திலும், 260மிமீ சிங்கிள், பெடல்-வகை டிஸ்க் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் நீண்ட டிராவல் உடன் 50மிமீ தலைக்கீழான ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ப்ரீலோடு-அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி கொண்ட மோனோ-ஷாக்கும் கொடுக்கப்படுகின்றன.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

ஏற்கனவே கூறியதுபோல், பிஎஸ்6-க்கு இணக்கமானதாக அப்டேட் செய்யப்பட்ட பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் மோட்டார்சைக்கிள் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்6 டிஆர்கே502எக்ஸ் பைக்கின் தோற்றத்தில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

புதிய டிசைனில் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், பிட்ச் லிவர் இண்டிகேட்டர் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹேண்டில்பார், பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கு அலுமினியத்திலான புதிய பெட்டகம் மற்றும் புதிய டிசைனில் இருக்கை என மிகவும் சில அப்டேட்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன.

இனி மஞ்சள் நிறத்திலும் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கை வாங்கலாம்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!

இந்தியாவில் பெனெல்லி டிஆர்கே502எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.5.25 லட்சங்களாக உள்ளது. விற்பனையில் இந்த இத்தாலியன் அட்வென்ச்சர் பைக்கிற்கு கவாஸாகி வெர்ஸஸ் 650 மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் ஏபிஎஸ் உள்ளிட்டவை இந்தியாவில் போட்டியாக விளங்குகின்றன. இவற்றுடன் ஒப்பிடுகையில் பெனெல்லி அட்வென்ச்சர் பைக்கில் இயக்க ஆற்றல் குறைவாகவே கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli launches new colour option for TRK 502X in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X