ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதுமுக பைக்குகளில் ஒன்றான மீட்டியோர் 350க்கு போட்டியளிக்க வேண்டும் என்பதற்காக 2021 பெனெல்லி இம்பீரியல் 400 பைக் முன்பை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இப்பைக் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

பிரீமியம் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பெனெல்லி, அதன் 2021 இம்பீரியல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 2020 பிஎஸ்6 மாடலைக் காட்டிலும் ரூ. 10 ஆயிரம் குறைந்த விலையில் இப்பைக் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

தற்போது புதிய விலையாக ரூ. 1.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். பெனெல்லி நிறுவனம் பிஎஸ்6 இம்பீரியல் 400 பைக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் ஆதீஸ்வரர் ஆட்டோ ரைட் இந்தியா - மஹாவீர் குழுமத்தின்கீழ் இப்பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

இந்த நிறுவனங்களுடனான கூட்டணியைத் தொடர்ந்து பெனெல்லி இம்பீரியல் உள்ளிட்ட சில பைக்குகளின் உற்பத்தி உள்ளூர் மயமாக்கப்பட்டது. இதனால் சில பைக்குகளின் விலை லேசாக குறைந்து வருகின்றன. அந்தவகையிலேயே ரூ.10 ஆயிரம் வரை புதிய 2021 பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை குறைந்திருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

இந்த பைக் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கிற்கு மட்டுமின்றி ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கும் இந்த போட்டியாக களமிறங்கியிருக்கின்றது. இதில், ராயல் எஃன்பீல்டு மீட்டியோர் பைக்கே மிக குறைந்த விலைக் கொண்ட பைக்கா இருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

இந்த பைக் ரூ. 1.78 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் ரூ. 1.87 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இவ்விரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றிற்கு போட்டியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

இந்த விலை மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் தற்போது களமிறங்கியிருக்கும் 2021 இம்பீரியல் மாடலில் இடம்பெறவில்லை. ஆகையால், அதே டிசைன் தாத்பரியங்கள் மற்றும் அம்சங்களையே இந்த பைக் தாங்கிக் கொண்டிருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

இப்பைக்கில், வட்ட வடிவிலான ஹெட்லைட், டியர் ட்ராப் வடிவிலான ப்யூவல் டேங்க், 41 மிமீ அளவிலான டெலிஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் ட்யூவல் ஷாக்ஸ் பின் பக்கத்தில் என அதே அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்....

இதேபோன்று, அதே 374 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய பிஎஸ்6 சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே இப்பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 20.71 பிஎச்பியையும், 29 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது. இந்த திறன்களை 5 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியுடன் இணைந்தே இப்பைக் வெளிப்படுத்துகின்றது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Launches 2021 Imperiale 400 Bike At Rs.1.89 Lakh. Read In Tamil.
Story first published: Friday, February 5, 2021, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X