நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

பிஎஸ்4 தர மாடலைக் காட்டிலும் பிஎஸ்6 தர டிஆர்கே 502எக்ஸ் பைக் ரூ. 31 ஆயிரம் குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

பெனெல்லி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் டிஆர்கே 502எக்ஸ் மோட்டார்சைக்கிளும் ஒன்று. இந்த பைக்கையே பிஎஸ்4 தரத்தில் இருந்து பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தியிருக்கின்றது பெனெல்லி. இந்த தரம் உயர்த்தப்பட்ட பைக்கையே தற்போது நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

இதன் அறிமுக விலையாக ரூ. 5.19 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்பு விற்பனையில் இருந்த பிஎஸ்4 தர டிஆர்கே 502எக்ஸ் மாடலைக் காட்டிலும் குறைந்த விலையாகும். பிஎஸ்4 டிஆர்கே 502எக்ஸ் பைக் தற்போதைய விலையைக் காட்டிலும் ரூ. 31 ஆயிரம் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

இரு விதமான வேரியண்டுகளில் இப்புதிய டிஆர்கே 502எக்ஸ் பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், தூய்மையான வெள்ளை மற்றும் சிவப்பு நிற தேர்வில் கிடைக்கும் டிஆர்கே 502எக்ஸ் பைக் ரூ. 5.29 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது அறிமுக விலை என்பதால் விரைவில் இதன் விலையை நிறுவனம் உயர்த்த அதிக வாய்ப்புகள் உள்ளன. புதியி டிஆர்கே 502எக்ஸ் பைக்கில் 499சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

இது அதிகபட்சமாக 46.8 பிஎச்பியை 8,500 ஆர்பிஎம்மிலும், 46 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த திறனை 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உதவியுடன் இந்த எஞ்ஜின் வெளியேற்றும். பிஎஸ்6 தர உயர்வைத் தொடர்ந்து கணிசமான புதுப்பித்தல் பணிகள் இப்பைக்கில் செய்யப்பட்டிருக்கின்றன.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

அந்தவகையில், புதிய டிஆர்கே 502எக்ஸ் பைக்கில் பேக்லிட் ஸ்விட்ச் கியர், அலுமினியம் ஃப்ரேமிலான க்னக்கிள் குவார்ட், ஹேண்டில் பார் கிரிப்கள் மற்றும் மறு சீரமைப்பு செய்யப்பட்ட கண்ணாடி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

தொடர்ந்து இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய லே-அவுட்டை இதற்கு வழங்குகின்றது. இதில் ஆரஞ்சு எல்சிடி திரை மற்றும் வெள்ளை நிற பின்னொளிக் கொண்ட அனலாக் டேக்கோமீட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

இப்பைக்கை பிரமாண்ட ஆஃப்-ரோடு வாகனமாக மாற்றும் வகையில் 19-17 இன்ச் அளவுள்ள ஸ்போக் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிக உயரமுள்ள வீல்களை இதில் பயன்படுத்தியிருக்கின்ற காரணத்தினால் 220மிமீ அளவில் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் உயர்ந்திருக்கின்றது.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

தொடர்ந்து பைக்கின் தோற்றத்தை சற்று முரட்டுத்தனமானதாக காட்டும் வகையில் வாகனத்தின் முன் பகுதியில் ஓர் பெரிய விண்ட் ஸ்கிரீன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், வாகனத்தின் பின் பகுதியில் பாக்ஸ் போன்ற அலுமினியம் பிராக்கெட் பொருத்தப்பட்டிருக்கின்றது.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

மேலும், பைக்கின் சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு பிஸ்டன்களுடன் கூடிய 320மிமீ அளவுள்ள ஃப்ளோட்டிங் டிஸ்க் முன்பக்கத்திலும், ஒற்றை பிஸ்டன் காலிபருடன் 260மிமீ அளவுள்ள டிஸ்க் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு, எக்கசக்க சிறப்பம்சங்களை இந்த வாகனம் தாங்கியிருக்கின்ற வேலையிலும் இதன் விலை உயர்த்தபடவில்லை.

நம்பவே முடியல! முன்பைவிட ரூ.31,000 குறைவான விலையில் அறிமுகமானது பெனெல்லி பைக்... பதற்றத்தில் போட்டியாளர்கள்!

மாறாக குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மூன்று ஆண்டுகள் அல்லது அளவற்ற கிலோ மீட்டர்கள் வாரண்டி எனும் சிறப்பு ஆஃபரை நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ரூ. 10 என்ற அடிப்படை தொகையில் பைக்கிற்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Launches 2021 TRK 502X BS6 Bike In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X