Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

பெனெல்லி (Benelli) நிறுவனத்தின் மலிவு விலை அட்வென்சர் பைக்காக விற்பனைக்கு வர இருக்கும் டிஆர்கே 251 (TRK 251) மாடலுக்கு இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களைக் கீழே காணலாம், வாங்க.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

பிரீமியம் மற்றும் சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனமான பெனெல்லி (Benelli), இந்தியாவில் அதன் புகழ்வாய்ந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் புகழ்பெற்ற டிஆர்கே 251 (TRK 251) மாடல் மோட்டார்சைக்கிளுக்கே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

ரூ. 6 ஆயிரம் முன் தொகையில் பைக்கிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் இருசக்கர வாகனத்திற்கான புக்கிங்குகள் நடைபெற்று வருகின்றது. டிஆர்கே 251 ஓற் அட்வென்சர் டூரர் ரக இருசக்கர வாகனம் ஆகும். நெடு நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக இதனை பெனெல்லி நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

இதனையே மிக விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அடுத்த மாதம் இதன் அறிமுகம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே டிஆர்கே 251 பைக்கிற்கான புக்கிங் பணிகளை பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

இது நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, அட்வென்சர் பயணங்களை விரும்புவோர் மத்தியில் இந்த இருசக்கர வாகனத்தின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த பைக்கில் சிறப்பு வசதிகளை நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

அண்மையில் பெனெல்லி நிறுவனம் இந்த பைக்கிற்கு மூன்று ஆண்டுகள், எல்லை இல்லா கிமலோமீட்டர்கள் வாரண்டியை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

பெனெல்லி டிஆர்கே 251 மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கிளாஸ்ஸி வெள்ளை நிறம் (Glossy White), குளாஸ்ஸி கருப்பு (Glossy Black) மற்றும் குளாஸ்ஸி சாம்பல் (Glossy Grey) ஆகிய நிறங்களிலேயே இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

முற்றிலும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இந்த பைக்கில் மிகவும் அசத்தலான திறன் வெளிப்பாடு எஞ்ஜினை பெனெல்லி பயன்படுத்தி இருக்கின்றது. 249 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினை நிறுவனம் பயனப்டுத்தி இருக்கின்றது. இது ஓர் புதிய தலைமுறை எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும்.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 25.8 பிஎச்பி மற்றும் 21.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த இந்த அட்வென்சர் பைக்கில் பன்முக ஈர்க்கும் வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ட்வின்-பாட் ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், உயரமான விண்ட் ஸ்கிரீன் மற்றும் ஸ்டெப்-அப் இருக்கை ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

இத்துடன், பைக்கில் அப்சைடு-டவுன் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோ ஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சிறந்த பிரக்கிங் அனுபவத்திற்காக சிங்கிள், பெடல் ரக டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இவை மிக மிக சிறந்த பிரேக்கிங்கை வழங்க உதவும்.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

பெனெல்லி டிஆர்கே251 பைக்கின் விலை விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த பைக் ரூ. 2.2 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சற்றே விலை குறைவான அட்வென்சர் பைக்காக இது வர இருக்கின்றது. ஆகையால், இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் அமோக வரவேற்பைப் பெறும் என நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இந்திய இருசக்கர வாகன சந்தையில் பெரிய ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் வகையில் பெனெல்லி டிஆர்கே 251 பைக்கை அடுத்த வருடத்தில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Benelli-இன் மலிவு விலை அட்வென்சர் பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்... ரூ. 6 ஆயிரம் மட்டும் போதும்!

தற்போது இந்திய சந்தையில் அட்வென்சர் ரக இருசக்கர வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைத்து வரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இப்புதிய பெனெல்லி டிஆர்கே 251 இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் அட்வென்சர் பைக்காக ஹிமாலயன் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது இந்தியாவில் ரூ. 2.45 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதற்கு குறிப்பாக போட்டியளிக்கும் வகையிலேயே டிஆர்கே 251 வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 6, 2021, 18:41 [IST]
English summary
Benelli opens bookings for trk 251 in india ahead of next month launch
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+