மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற, அதே சமயம் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. சாலைகள் சிறியதாக இருப்பதாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

மிக கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில்தான் இங்கு பலர் தினமும் அலுவலகத்திற்கும், சொந்த வேலைகளுக்கும் பைக்குகளில் சென்று வருகின்றனர். அதே நேரத்தில் இதை விட பெரிய பிரச்னையாக பெட்ரோல் விலை உயர்வு இருக்கிறது. போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளால் தினசரி பைக் பயன்படுத்துபவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

அவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த செய்தியை வழங்கியுள்ளோம். இந்தியாவின் நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற சிறந்த பைக்குகள் குறித்த தகவல்கள் இந்த செய்தியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதில், ஓரளவிற்கு சிறப்பான மைலேஜ் வழங்கும் பைக்குகள் அடங்கும். தீபாவளி பண்டிகை காலத்தில் நீங்கள் புதிய பைக் வாங்க திட்டமிட்டிருந்தால், இவற்றை பரிசீலனை செய்யலாம்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor)

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கும் இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகிறது. எரிபொருள் சிக்கனம், தினசரி நகர பயன்பாடு ஆகிய அம்சங்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் தலைசிறந்து விளங்குகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாக கூடிய பைக்குகளில் ஒன்றாக ஹீரோ ஸ்பிளெண்டர் இருக்கிறது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் எடை குறைந்த பைக்குகளில் ஒன்றாகவும் ஹீரோ ஸ்பிளெண்டர் திகழ்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த பைக் உங்களை சுமார் 60 கிலோ மீட்டர்கள் அழைத்து செல்லும். இந்தியாவில் தற்போது பெட்ரோல் விற்பனை செய்யப்படும் விலையை கருத்தில் கொண்டால், இது சிறப்பான மைலேஜ்தான்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe)

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் எடை வெறும் 110 கிலோ மட்டுமே. அதே சமயம் இந்த பைக் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது. எனவே பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

ஹோண்டா ஷைன் (Honda Shine)

இதுவும் இந்தியாவில் அதிகம் விற்பனையாக கூடிய பைக்குகளில் ஒன்றுதான். இந்த பைக்கின் எடை வெறும் 114 கிலோ மட்டுமே. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற பைக்காக இருப்பதால், ஹோண்டா ஷைன் பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 55 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

ஹோண்டா யூனிகார்ன் (Honda Unicorn)

ஹோண்டா யூனிகார்ன் பைக்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு மேலாகி விட்டது. ஹோண்டா யூனிகார்ன் நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் நீடித்து உழைக்க கூடியது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய ஹோண்டா யூனிகார்ன் பைக்கை இன்றைக்கும் உங்களால் காண முடியும்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

இத்தனைக்கும் அது புதிது போன்று இருக்கும் என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம். யூனிகார்ன் பைக் ஒரு லிட்டருக்கு 45 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கிறது. ஹோண்டா யூனிகார்ன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த கூடிய பைக் என்னும் நிலையில், இது உண்மையில் சிறப்பான மைலேஜ்தான்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina)

இந்திய சந்தையில் கிடைக்கும் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாக பஜாஜ் பிளாட்டினா பைக்கை குறிப்பிடலாம். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது. இதை விட அதிக மைலேஜ் கிடைப்பதாகவும் கூட ஒரு சிலர் கூறுகின்றனர். பெட்ரோல் விலை உயர்வு மட்டும்தான் பிரச்னை என்றால், இது நிச்சயமாக உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

பஜாஜ் சிடி 100 (Bajaj CT 100)

இதுவும் சிறப்பான மைலேஜை வழங்க கூடிய பைக்தான். பஜாஜ் பிளாட்டினா பைக்கை போல், பஜாஜ் சிடி 100 பைக்கும் ஒரு லிட்டருக்கு 75 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். இந்த பைக்கின் எடை 115 கிலோ. தினமும் அதிக தூரம் பயணம் செய்ய கூடியவர்களுக்கு பஜாஜ் சிடி 100 பைக் உண்மையில் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

பஜாஜ் பல்சர் 150 (Bajaj Pulsar 150)

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் பைக் என்ற பெருமையுடன், கடந்த 2001ம் ஆண்டு பஜாஜ் பல்சர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக பஜாஜ் பல்சர் 150 பலரின் மனம் கவர்ந்த தயாரிப்பாக திகழ்கிறது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள்... ஒரு லிட்டருக்கு இவ்ளோ கெடைக்குதா? தீபாவளிக்கு ஒன்னு வாங்கீர வேண்டியதுதான்!

கவர்ச்சிகரமான தோற்றம், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆகிய அம்சங்கள்தான் பஜாஜ் பல்சர் 150 பைக்கை போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிய செய்கின்றன. பல்சர் 150 பைக் ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் தரும் என பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் மாறுபடலாம்.

Most Read Articles
English summary
Best city and commuter bikes hero splendor hf deluxe honda shine unicorn bajaj platina ct 100
Story first published: Friday, October 29, 2021, 14:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X