அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிரபல எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று விரைவில் இரு புதுமுக மின் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்த தொடங்கியிருக்கின்றன.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

அந்தவகையில், ஆர்ஆர் குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் பிகாஸ் (BGauss) நிறுவனம் விரைவில் இரு புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுமுக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக அதன் சக்கன் தயாரிப்பு ஆலையை வளுவூட்டும் பணியில் பிகாஸ் களமிறங்கியிருக்கின்றது.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

புதிய தயாரிப்புகள் இரண்டும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களை மட்டுமே கொண்டு இரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களையும் நிறுவனம் உருவாக்க இருக்கின்றது.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

இரு புதுமுக மின்சார வாகனங்களையும் நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இந்தியர்களின் தேவையை உணர்ந்து அந்த இரு எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

தற்போது பிகாஸ் நிறுவனத்தின்கீழ் இரு விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வரிசையை வலுவூட்டும் வகையிலேயே இரு புதிய மின்சார டூ வீலர்கள் களமிறக்கப்பட இருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் பிகாஸ் இ-வாகனங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவை.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

இவற்றிற்கு இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த வரவேற்பை சற்று அதிகரிக்க செய்யும் வகையில் இரு புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் பிகாஸ் களமிறங்கியிருக்கின்றது. இவையிரண்டும் தற்போது விண்ணைத் தொடுமளவு உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வில் இருந்து பாதுகாக்க வழி வகுக்கும்.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

பிகாஸ் பி8 மற்றும் ஏ2 எனும் இரு எலெக்ட்ரிக்ஸ் கூட்டர்களையே விற்பனைக்கு வழங்கி வருகின்றன. ஒன்று உயர் வேக திறன் கொண்டதாகவும், மற்றொன்று குறைந்த வேக திறன் கொண்டதாகவும் உள்ளன. இதில், பிகாஸ் பி8 மூன்று விதமான தேர்விலும், பிகாஸ் ஏ2 இரு விதமான தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

அதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்! எந்த நிறுவனம் தெரியுமா?

பி8 மாடலின் ஆரம்ப விலை ரூ. 62,999 ஆகும். இதேபோன்று ஏ2-விற்கு ரூ. 52,449 என்ற ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.9 kW மோட்டார் மற்றும் 70 கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஏ2 மாடலும் அதிகபட்சமாக 75 கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
BGauss Planning To Launch 2 New Made In India Electric Two Wheelers In This Year. Read In Tamil.
Story first published: Friday, July 30, 2021, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X