பைக்கிற்கு சீட் பெல்ட்டா!! இத்தாலி நாட்டு நிறுவனம் வடிவமைப்பு... யாருமே யோசிச்சதில்ல!

உலகிலேயே முதல்முறையாக மோட்டார்சைக்கிளுக்கான சீட் பெல்ட்டிற்கு இத்தாலியை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனம் ஒன்று காப்புரிமை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பைக்கிற்கு சீட் பெல்ட்டா!! இத்தாலி நாட்டு நிறுவனம் வடிவமைப்பு... யாருமே யோசிச்சதில்ல!

நான்கு சக்கர கார்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு எத்தனை புதிய புதிய தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகள் வந்தாலும், சீட் பெல்ட் எப்போதுமே ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.

ஏனெனில் விபத்துகளின் போது சீட் பெல்ட்டினால் காப்பாற்றப்பட்டவர்களின் கதை ஏராளம். ஆனால் சீட் பெல்ட்டை மோட்டார்சைக்கிளில் கொண்டுவரும் எண்ணம் தற்போது வரையில் எந்த மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கும் வரவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

முக்கியமான காரணம் அவற்றை வடிவமைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் தான். ஏனெனில் காரில் இருக்கைகளில் சீட் பெல்ட்டை கொண்டுவருவது பெரிய அளவில் கஷ்டமில்லாத ஒன்று. ஆனால் மோட்டார்சைக்கிளின் கதையே வேறு. மோட்டார்சைக்கிளில் இருக்கைகள் கார்களை போல் வழங்கப்படுவதில்லை.

பைக்கிற்கு சீட் பெல்ட்டா!! இத்தாலி நாட்டு நிறுவனம் வடிவமைப்பு... யாருமே யோசிச்சதில்ல!

இதனால் நமது உடலே மோட்டார்சைக்கிளை பிடித்து கொண்டு தான் இயங்குகிறது. அதில் மேலும் நமது உடலை இறுக்கி பிடித்து கொள்ள சீட் பெல்ட் அவசியமில்லை என்றே பெரும்பாலான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் நினைக்கின்றன.

இருப்பினும் இந்த நிலை நீண்ட காலத்திற்கு இருக்க போவதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் மோட்டார்சைக்கிளில் சீட் பெல்டை கொண்டுவர இத்தாலி நாட்டை சேர்ந்த இட்டால் டிசைன் என்கிற வடிவமைப்பு & பொறியியல் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் வெளிப்பாடே இந்த காப்புரிமை படமாகும். ‘மோட்டார்சைக்கிள் பயணி பாதுகாப்பு சிஸ்டம்' என்கிற பெயரில் இந்த கண்டுப்பிடிப்பு கொண்டுவரப்பட்டாலும், இது இரு சக்கர, முன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் இருக்கைகளிலும் பொருத்தலாம் என வடிவமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைக்கிற்கு சீட் பெல்ட்டா!! இத்தாலி நாட்டு நிறுவனம் வடிவமைப்பு... யாருமே யோசிச்சதில்ல!

இந்த சீட் பெல்ட் கண்டுப்பிடிப்பின் முக்கிய நோக்கமே ரைடரை பைக்கில் ஒரே பகுதியில் அமர வைக்க வேண்டும் என்பதாகும். அதேநேரம் விபத்துகளின் போது ஓட்டுனரை மோட்டார்சைக்கிளில் இருந்து பிரிந்து செல்லவும் அனுமதிக்குமாம். இதற்காக சில சென்சார்கள் இந்த சீட் பெல்ட்டில் பொருத்தப்பட்டுள்ளன.

ஓட்டுனரின் உடலை பாதிக்காத வகையில் மென்மையான பொருளினால் தயாரிக்கப்படவுள்ள இந்த மோட்டார்சைக்கிள் சீட் பெல்ட், பைக்கில் ஓட்டுனர் நன்கு சவுகரியமாக அமர்ந்தப்படி பயணம் செய்வதற்கு உதவியாக வளையத்தக்க இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

விபத்துகளில் ஓட்டுனரை இறுக்க பிடித்து கொள்ள ப்ரீ-டென்ஷ்னர் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 4-அச்சு சீட் பெல்ட், விரைவான-வெளியீட்டு பொறிமுறையையும் கொண்டதாக இருக்கும். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஓட்டுனரின் தலை பகுதியில் மோதல் ஏற்பட்டால் இந்த சிஸ்டம் ஓட்டுனரை பைக்கில் இருந்து பறக்கவிடாமல் தடுக்கும்.

ஏனெனில் அவ்வாறான நேரங்களில் மோட்டார்சைக்கிளில் இருந்து ஓட்டுனர் பிரியும்போது தான் சேதாரம் அதிகமாகிறது. அதேநேரம் மோதல் பைக்கின் பக்கவாட்டில் ஏற்படுகிறது என்றால் ஓட்டுனரை பைக்கில் இருந்து பிரிந்து செல்ல அனுமதிக்கும்.

Most Read Articles

English summary
World's First Two Wheeler Seat Belt Patent Filed by Italdesign, Check How It Works.
Story first published: Saturday, May 29, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X