புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் மிக விரைவில் இந்திய சந்தையில் மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவமான பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) எனும் பெயரில் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. குறிப்பாக இந்த பிராண்டின்கீழ் நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை (பைக்) மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

இந்த நிலையில், முதல் முறையாக ஸ்கூட்டரை களமிறக்க இருப்பதாக நிறுவனம் தற்போது தெரிவித்திருக்கின்றது. சமூக வலை தள பக்கத்தின் வாயிலாக இத்தகவலை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இந்தியா கேட்டிற்கு முன்பாக ஓர் ஸ்கூட்டர் பயணிப்பது போன்ற புகைப்படத்துடன், "விரைவில் வந்து சேரும். காத்திருங்கள்!" என்று பதிவிட்டிருக்கின்றது.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

இதைத்தொடர்ந்தே, பிஎம்டபிள்யூ இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. நிறுவனம் மேக்ஸி ரக ஸ்கூட்டரையே களமிறக்க இருக்கின்றது. இந்தியாவில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த ரக ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

பெரியளவில் போட்டியில்லா இந்த சந்தையை தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் விதமாக பிஎம்டபிள்யூ இந்த செயலில் களமிறங்கியிருக்கின்றது. எந்த மாடல் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

அதேசமயம், இந்நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனைச் செய்து வரும் மேக்ஸிரக ஸ்கூட்டர்களைக் கருத்தில் கொண்டு சி400 எக்ஸ் மற்றும் சி400 ஜிடி ஆகிய இரண்டு மாடல்களைத் தழுவிய ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

தொடர்ந்து, இந்திய சந்தையில் 350சிசி ரக மேக்ஸி ரக ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ களமிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. மேலும், ஏபிஎஸ், கருப்பு நிற விண்ட்ஷீல்டு, செல்போன் இணைப்பு வசதி, நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களும் பிஎம்டபிள்யூ மேக்ஸி ரக ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

இதுமட்டுமின்றி பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், அதிக சொகுசான இருக்கை, அதி சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவையும் விரைவில் அறிமுகமாக உள்ள பிஎம்டபிள்யூ ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ! என்னென்ன அம்சங்கள் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்?

தற்போது இந்தியாவில் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்கள் மட்டுமே மேக்ஸ் ரக இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் மேக்ஸி ரக ஸ்கூட்டரும் இந்த சந்தையை அலங்கரிக்க இருக்கின்றன.

Most Read Articles

English summary
BMW Confirmed Maxi-Scooter For India: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X