இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்த பைக்கில் எதாவது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் ஜப்பான் சந்தையில் 708,000 ஜப்பானிய யென்னில் அதன் ஜி310 ஜிஎஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4.79 லட்சமாகும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

ஆனால் இந்திய சந்தையில் இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் ரக பைக்கின் விலை ரூ.2.90 லட்சமாக தான் உள்ளது. இந்த வகையில் பார்த்தோமேயானால் இந்த பைக் கிட்டத்தட்ட ரூ.1.90 லட்சம் அதிகமாக ஜப்பானில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவே நம் நாட்டில் இந்த பைக்கிற்கு விலை குறைவாக இருப்பதற்கு காரணமாகும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஜி310 வரிசையில் ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் என்ற இரு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஜி310 ஆர், பேனல்கள் அவ்வளவாக இல்லாத நாக்டு மோட்டார்சைக்கிளாகும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

குறிப்பிடத்தக்க அப்கிரேட்களுடன் 2021 ஜி310 ஜிஎஸ் பைக் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப்கிரேட்களின் ஒரு பகுதியாக ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் & டர்ன் இண்டிகேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் முழு-டிஜிட்டல் விளக்குகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

அதேபோல் சற்று மறு வடிவம் பெற்ற பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகளுடன் மொத்த பைக்கின் ஸ்டைலும் சிறிது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதே தோற்றத்தில் தான் 2021 ஜி310 ஜிஎஸ் பைக் ஜப்பானிய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

இயந்திர பாகங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜி310 ஜிஎஸ் பைக் கருப்பு- நீலம் என்ற இரட்டை நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்காங்கே சிவப்பு நிற ஹைலைட்களையும் பைக்கை சுற்றிலும் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

இந்த பெயிண்ட் தேர்வுடன் போலார் வெள்ளை நிறத்தேர்விலும், ‘40 வருட ஜிஎஸ்' எடிசனிலும் இந்த 2021 பிஎம்டபிள்யூ பைக் ஜப்பானில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பைக்கில் 312சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்!! விலை விண்ணை முட்டுது...

அதிகப்பட்சமாக 34 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கில் வழங்கப்படுகின்ற முக்கிய தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், ரைடு-பை-வயர் த்ரோட்டல், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய க்ளட்ச் மற்றும் ப்ரேக் லிவர் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

Most Read Articles

English summary
India-made 2021 BMW G 310 GS goes on sale in Japan.
Story first published: Wednesday, May 5, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X