மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

பைக்கா? இல்லை மிதிவண்டியா? என சந்தேகப்படுகின்ற வகையிலான அட்டகாசமான தோற்றத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வெளியீட்டைப் பெற்றிருக்கின்றது. இந்த வாகனம்குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

இது மோட்டார்சைக்கிளா? அல்லது மிதிவண்டியா? என சந்தேகிக்கும் அளவிற்கு பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் ஓர் இருசக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கின்றது. மேலும், அந்த வாகனத்தை தற்போது உலகளவில் கான்செப்ட் மாடலாக அந்நிறுவனம் வெளியீடும் செய்திருக்கின்றது.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான BMW (பிஎம்டபிள்யூ) நிறுவனமே இந்த விநோத தோற்றம் கொண்ட இருசக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கும் தயாரிப்பாளர் ஆவார். இந்நிறுவனம், BMW Motorrad (பிஎம்டபிள்யூ மோட்டாராட்) எனும் பெயரில் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

தற்போது உலகளவில் மின் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் பெட்ரோலால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் உடன் சேர்த்து மின்சாரத்தால் இயங்கும் டூ வீலர்களையும் அது உற்பத்தி செய்ய தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில் நிறுவனம் புதிதாக தயாரிக்க தொடங்கியிருக்கும் மாடலே Vision AMBY (விஷன் ஆம்பி).

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

தற்போது இந்த இருசக்கர வாகனத்தை உலகளவில் கான்செப்ட் மாடலாக நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகிய இரு வாகனங்களின் உருவம் அடங்கிய தோற்றம் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் திறனைப் பெற்றிருப்பது உள்ளிட்ட காரணங்களால் இது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

இதுமட்டுமின்றி பல பிரம்மிக்க வைக்கும் வசதிகளையும் விஷன் ஆம்பி இருசக்கர வாகனத்தில் பிஎம்டபிள்யூ புகுத்தியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்-தர டெக்னாலஜி, யூசபிளிட்டி மற்றும் பிராக்டிக்கலி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இரட்டைத் தோற்றம் கொண்ட இருசக்கர வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

விஷன் ஆம்பி மின்சார இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் மிக சிறிய மின் விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், யு வடிவிலான பிஎம்டபிள்யூ மோட்டாராட் சிக்னேச்சர் மின் விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து,பெரிய அளவிலான சக்கரம் மற்றும் ஃபோர்க் ஆகியவையும் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

பொதுவாக மோட்டார்சைக்கிள்களில் இருப்பதைக் காட்டிலும் அதிக உயரமான வீல் மற்றும் தடிமனான டயர் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனாலேயே இவ்வாகனம் மோட்டார்சைக்கிளா அல்லது மிதிவண்டியா என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இதன் பிற தோற்றமே இது மோட்டார்சைக்கிள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

விஷன் ஆம்பி எலெக்ட்ரிக் பைக்கின் முன் பக்கத்தில் 26 இன்சிலான வீலும், பின்பக்கத்தில் 24 இன்சிலான வீலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் டயர் மிக தடமனாக கரடு-முரடான சாலையைச் சமாளிக்கும் வகையில் சிறப்பு உருவத்தை பெற்றிருக்கின்றது. எலெக்ட்ரிக் பைக்கின் மெல்லிய உருவம் அது ஓர் டர்ட் பைக்கைப் போன்று காட்சியளிக்க செய்கின்றது.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

கான்செப்ட் மாடலில் முழுமையாக 110 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கக் கூடிய பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், சாலையை தானாகவே கண்டறிந்து வேகத்தைக் கூட்டும் தொழில்நுட்ப வசதியை பிஎம்டபிள்யூ இதில் வழங்கியிருக்கின்றது. அதிக நெரிசலான சாலையில் மணிக்கு 25 கிமீ வேகத்தையும், பல-லேன் அமைப்பைக் கொண்ட சாலையில் மணிக்கு 45கிமீ வேகம் தொடங்கி மணிக்கு 60 கிமீ வேகம் வரையில் அது செல்லும்.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

இது அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்பதால் ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும். அதேவேலையில் இந்த வேகத்தில் த்ரோட்டில் கிரிப்பிற்கு பதிலாக பெடல் செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இ-பைக்காக மட்டுமின்றி இதனை மிதிவண்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிதிவண்டியா? இல்ல பைக்கா? பிரபல நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு... கான்செப்ட் மாடலே இவ்ளே அசத்தலா இருக்கே!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் மிக சமீபத்தில் ஓர்CE 02 (சிஇ 02) எனும் கான்செப்ட் மாடலை உலகளவில் வெளியீடு செய்திருந்தது. இதன் ஸ்டைலும் தற்போது அறிமுகமாகியிருக்கும் கான்செப்ட் மாடலை போல நவீன கால மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தோற்றத்தைப் பெற்றிருந்தது. மேலும், அந்த வாகனமும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Bmw motorrad has unveiled vision amby concept two wheeler
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X