பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

2022 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்களை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

இந்த பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களில் அப்டேட்டாக புதிய நிறத்தேர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மற்றப்படி இந்த பைக்குகளின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மோட்டார்சைக்கிளுக்கு புதிய நிறத்தேர்வுகளாக கைனைட் நீல மெட்டாலிக் (சிவப்பு நிற ரிம்களுடன்) மற்றும் காஸ்மிக் கருப்பு என்ற இரு நிறங்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

இதில் காஸ்மிக் கருப்பு பெயிண்ட் தேர்வில் பைக் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளது. புதிய நிறத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதேநேரத்தில், ஜி310 ஆர் பைக்கிற்கு முன்பு வழங்கப்பட்டுவந்த போலார் வெள்ளை நிறத்தேர்வு நீக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

அதேபோல் அட்வென்ச்சர் ரக பைக்கான பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கிற்கு ட்ரிபிள் கருப்பு என்ற நிறத்தேர்வு புதியதாக வழங்கப்பட்டுள்ளது, முன்பு வழங்கப்பட்ட ‘ஜிஎஸ்-இன் 40 வருட' சிறப்பு பெயிண்ட் தேர்வு நீக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இதற்கு முன்னர் அப்டேட் செய்யப்பட்ட ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அப்போது இந்த பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் சில நிறத்தேர்வுகளையும், ஸ்டைலிங் மாற்றங்களையும் ஏற்றிருந்தன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

இவை இரண்டிலும் பொருத்தப்படுகின்ற பிஎஸ்6 313சிசி என்ஜின் தான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 9,500 ஆர்பிஎம்-இல் 33 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-இல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

இதனுடன் ஸ்லிப்பர் க்ளட்ச்சை கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றுடன் ரைடு-பை-வயர் தொழிற்நுட்பமும் நிலையாக வழங்கப்படுகிறது. இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்கிலும் தற்சமயம் முழு-எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி ப்ரேக் விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் & ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு புதிய நிறங்கள்!! எப்போது விற்பனைக்கு கிடைக்கும்?

க்ளட்ச் லிவர்கள் மற்றும் ஹேண்ட் ப்ரேக் லிவர்கள் நான்கு விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட்மெண்ட்டை கொண்டுள்ளன. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.50 லட்சமாகவும், ஜி 310ஜிஎஸ் பைக்கின் விலை ரூ.2.90 லட்சமாகவும் உள்ளன. இந்த புதிய நிறத்தேர்வுகள் இந்திய மாடல்களுக்கு இந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles

English summary
2022 BMW G 310 R, G 310 GS Revealed; Get New Colour Options.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X