இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர கார்களுக்கே டஃப் கொடுக்கும் விலையில் ஓர் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன ஸ்கூட்டர் அதன் விலை எவ்வளவு என்பது பற்றிய முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர கார்களுக்கே டஃப் கொடுக்கும் விலையில் ஓர் புதுமுக ஸ்கூட்டர் ஒன்று விற்பனைக்கு வந்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனத்தின் சி 400 ஜிடி (C 400 GT) மேக்ஸி ரக ஸ்கூட்டரே அது ஆகும். ரூ. 9.95 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதேவேலையில் இந்த பிரிவில் மிகவும் குறைவான ஸ்கூட்டர்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. எனவே, போட்டி சற்று குறைவாகவே தென்படுகின்றது. இந்த நிலையிலேயே தனது பிரீமியம் தர சி 400 ஜிடி மேக்ஸி ரக ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ மோட்டாராட் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

நிறுவனம் இதுவரை பைக் ரக இருசக்கர வாகனத்தை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி வந்தநிலையில், தற்போது முதல் முறையாக ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது பிஎம்டபிள்யூ இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

இந்தளவு உச்சபட்ச விலையில் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருவதும் இதுவே முதல் முறையாகும். முழுவதும் கட்டமைக்கப்பட்ட (completely built-up unit) ஓர் வாகனமாகவே சி 400 ஜிடி இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

விற்பனைக்கான அறிமுகத்தை முன்னிட்டு ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளை விற்பனையாளர்கள் வாயிலாக பிஎம்டபிள்யூ தொடங்கியிருக்கின்றது. பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரில் 350சிசி வாட்டர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 25கிலோவாட் (34 எச்பி) திறனையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக மணிக்கு 139 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், 9.5 செகண்டில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து, இன்னும் பல சிறப்பு வசதிகளைக் கொண்டதாக பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டர் காட்சியளிக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

பன்முக வசதிகள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் 6.5 இன்சிலான முழு வண்ண டிஎஃப்டி திரை, இணைப்பு வசதி உள்ளிட்டவை சி 400 ஜிடி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இணைப்பு வசதிக்கா பிரத்யேகமாக பிஎம்டபிள்யூ மோட்டாராட் இணைப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

இதன் வாயிலாக ஸ்கூட்டரை இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைக்கும்போது பல்வேறு வசதிகளை விரல் நுனியிலேயே பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், யுஎஸ்பி சார்ஜிங் பெரிய ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவையும் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

இரு நிற தேர்வில் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி மேக்ஸி ரக ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். அல்பைன் வெள்ளை மற்றும் ஸ்டைல் டிரிபிள் கருப்பு ஆகிய நிறங்களில் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். ஆகஸ்டு மாதம் 30 தேதி வெளியாகிய தகவலின்படி, புதிய சி 400 ஜிடி ஸ்கூட்டருக்கு 100 யூனிட் வரை புக்கிங் கிடைத்தது தெரிய வந்தது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

தற்போது இன்னும் சில நூறு புக்கிங்குகளை சி 400 ஜிடி பெற்றிருக்கும் என நம்பப்படுகின்றது. பிரீமியம் மற்றும் அதிக ஆடம்பர ரக வாகனங்களை விரும்புவோர் மத்தியில் இந்த ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பது ஆகஸ்டு மாதம் வெளியாகிய புக்கிங் தகவல் உறுதிப்படுத்துகின்றது.

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்கூட்டர்... விலைய கேட்டா வாங்குற ஆசையே போய்டும்... ஒரு காரை வாங்கிடலாம்!

இந்தியாவின் மேக்ஸி ரக ஸ்கூட்டர் சந்தையில் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரு ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் சி 400 ஜிடி ஸ்கூட்டரும் புதிதாக இணைந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Bmw motorrad launched c 400 gt maxi scooter in india at rs 9 95 lakh
Story first published: Tuesday, October 12, 2021, 16:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X