சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பிஎம்டபிள்யூ சி400ஜிடி ஸ்கூட்டரின் புதிய டீசர் வீடியோ ஒன்று அதன் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இதன் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

பிஎம்டபிள்யூ பிராண்டில் கார்கள் உள்ளன, பைக்குகள் உள்ளன, ஆனால் ஸ்கூட்டர் மிக மிக குறைவு தான். ஏனெனில் ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் இப்போதுதான் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் முயற்சி தான், சி400ஜிடி ஆகும்.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் கடைசியாக அப்டேட்டை பெற்றிருந்தது. இதுதான் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த டீசர் வீடியோ பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவில் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்சியளிக்கும் பிஎம்டபிள்யூ சி400ஜிடி ஸ்கூட்டர் விஐபி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. குறிப்பாக நகர்புறங்களில் வசிக்கும் பிரபலங்களை தான் பிஎம்டபிள்யூ டார்க்கெட் செய்திருப்பது அதன் இந்த டுவிட்டர் பதிவின் மூலம் தெரிய வருகிறது.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

அளவை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ சி400 ஜிடி ஒரு மேக்ஸி-ஸ்கூட்டராகும். அதாவது பெரும்பான்மையான பாகங்கள் வழக்கமான ஸ்கூட்டர்களை காட்டிலும் அளவில் பெரியதாக வழங்கப்படும். இந்த பிஎம்டபிள்யூ ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் அகலமான ஹெட்லேம்ப், எதிர்காற்றை தடுக்க பெரிய கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

இவற்றுடன் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள விளக்குகள் அனைத்துமே எல்இடி தரத்திலானவை. ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி இரண்டாக பிளவுப்பட்டது போல் வழங்கப்படுகிறது. எக்ஸாஸ்ட் குழாய் மேல்நோக்கியவாறும், படிக்கட்டு போன்ற வடிவில் இருக்கை அமைப்பும், பின்பக்கத்தில் பயணி பிடித்து கொள்ள கைப்பிடியும் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரின் அம்சங்களாக உள்ளன.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

தொழிற்நுட்ப அம்சங்களாக ரைடு-பை-வயர் தொழிற்நுட்பம், சாவியில்லா நுழைவு, ஹீட்டட் க்ரிப்கள் & இருக்கை, சுய-அளவீட்டு ASC (Auto Sound Calibration - தானியங்கி ஒலி அளவீடு) மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் துளை முதலியவை வழங்கப்படுகின்றன. மேக்ஸி-ஸ்கூட்டர் என்பதால் இருக்கைக்கு அடியில் பொருட்களை வைப்பதற்கான இடத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

நாவிகேஷனையும், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களையும் வழங்கும் டிஎஃப்டி திரையை சி400 ஜிடி-இல் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் வழங்குகிறது. வெளிநாடுகளில் அல்பைன் வெள்ளை, ஸ்டைல் ட்ரிபிள் ப்ளாக் மற்றும் காலிஸ்டோ க்ரே மெட்டாலிக் ஷேட்களில் இந்த பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

ப்ளூடூத் வாயிலாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இணைப்பை பெற்ற இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பிஎம்டபிள்யூ சி400 ஜிடி-இல் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு வரும் அழைப்புகள், இசை போன்றவற்றை ஹேண்டில்பாரில் கொடுக்கப்படும் பொத்தான்கள் மூலமாக கண்ட்ரோல் செய்யலாம்.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

பயணிகள் பாதுகாப்பிற்கு, வாகனம் திருடு போவதை எச்சரிக்கும் அமைப்பு, ஸ்டாண்டர்ட் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்படுகின்றன. சி400 ஜிடி ஸ்கூட்டரில் பிஎஸ்6-க்கு இணக்கமான 350சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 34 எச்பி மற்றும் 5,750 ஆர்பிஎம்-இல் 26 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த முதல் பிஎம்டபிள்யூ ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 140கிமீ வேகத்தில் பயணிக்கலாம். சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 35மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை சுருள் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன.

சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு நகர்புற விஐபி-களை டார்க்கெட் செய்யும் பிஎம்டபிள்யூ! பின்ன அவங்களால தான வாங்க முடியும்

ப்ரேக்கிற்கு முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் ஏபிஎஸ் உடன் பொருத்தப்படுகின்றன. இதே இயந்திர பாகங்கள் தான் இந்திய சி400ஜிடி மாடலிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த பிஎம்டபிள்யூ மேக்ஸி-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 5, 2021, 18:58 [IST]
English summary
BMW Scooter C400GT Coming Soon – New Launch Teaser.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+