சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

BMW Motorrad நிறுவனம் CE 02 எனும் தனது எலெக்ட்ரிக் மொபட் ரக கான்செப்ட் இருசக்கர வாகனத்தை வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த முக்கிய விபரங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

உலக புகழ் பெற்ற சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான BMW (பிஎம்டபிள்யூ), BMW Motorrad (பிஎம்டபிள்யூ மோட்டாராட்) எனும் பெயரில் பிரீமியம் தர மற்றும் சூப்பர் ரக பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றது. இந்நிறுவனம் பெட்ரோலால் இயங்கும் வாகன இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மின்சார வாகன தயாரிப்பிலும் ஈடுபட தொடங்கியிருக்கின்றது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

அந்தவகையில், நிறுவனம் தற்போது புதிதாக ஓர் மின்சார மொபட் ரக இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட தொடங்கியிருக்கின்றது. CE 02 (சிஇ 02) எனும் பெயரிலேயே புதுமுக மொபட் ரக இருசக்கர வாகனத்தை நிறுவனம் உருவாக்கி வருகின்றது. இந்த இருசக்கர வாகனத்தை எந்த உருவத்தில் தாங்கள் தயாரிக்க இருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டும் வகையில் சிஇ 02 வின் கான்செப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்திருக்கின்றது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

இதனை ஐஏஏ 2021 வீக்ஸ் டைம்-இல் வெளியீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையிலேயே கான்செப்ட் மாடலின் படங்களை நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. இதனை பிஎம்டபிள்யூ மோட்டாராட் ஓர் சிறிய ரக வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. அதேவேலையில் மிகவும் கிளாசியான தோற்றம் கொண்ட வாகனமாகவும் அதனை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளரான Edgar Heinrich இவரே சிஇ 02 எலெக்ட்ரிக் மொபட்டை உருவாக்கியவர் ஆவார். இதனை சிறுவர்கள் (16 வயது சிறுவர்கள்) தொடங்கி பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இயக்கும் வகையில் வாகனத்தை அவர் வடிவமைத்திருக்கின்றார். பேன்சியான மற்றும் மிகவும் அதிக தொழில்நுட்ப வசதிகளை விரும்புவோரை நிச்சயம் இது கவரும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

இதன் ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஒற்றை துண்டு இருக்கை, கார்களில் பயன்படுத்துவது போன்ற அமைப்பு வீல் (இலகானது), நான்கு புள்ளிகள் போன்ற எல்இடி மின் விளக்கு, மிதி வண்டிகளில் இருப்பதைப் போல ஹேண்டில் பார் உள்ளிட்டவை இந்த மொபட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

இதுமட்டுமின்றி, மொபட்டின் பின் பக்கத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் ரியர்ஷாக் அப்சார்பர் மற்றும் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் காண்பிக்கும் வகையில் காட்சியளிக்கின்றது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

தொடர்ந்து, இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி ரிஜெனரேஷன் பிரேக்கிங் வசதியும் இந்த வாகனத்தில் வழங்கப்பட இருக்கின்றது. மின்சார இருசக்கர வாகனத்தில் பேட்டரி மற்றும் மின் மோட்டார் ஆகிய இரண்டும் வாகனத்தின் மையப் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

சிறந்த கிராவிட்டி திறனை வெளிப்படுத்துவதற்காக இத்தகைய யுக்தியை சிஇ 02 எலெக்ட்ரிக் மொபட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 11kW மின் மோட்டார் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

இத்துடன், இந்த வாகனத்தில் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி ஓர் முழுமையான சார்ஜில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ சிஇ 02 மொபட் 730 மிமீ உயரம் மற்ரும் எடை 120 கிலோகிராம் எடைக் கொண்டதாகவும் இருக்கின்றது. முற்றிலும், இளம் தலைமுறையினரை கருத்தில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதால் இன்னும் பல அம்சங்களை விற்பனைக்கு வரும் போது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

எல்இடி மின் விளக்கு, இணைப்பு வசதி, நேவிகேஷன், டிஜிட்டல் திரை உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேலையில் இந்த எலெக்ட்ரிக் வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய தகவல் வெளியிடப்பவில்லை. இருப்பினும், இதன் தோற்றம் மற்றும் ஸ்டைல் அனைவர் மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சின்ன பசங்ககூட ஓட்டலாம்... புதிய ஸ்டைலில் BMW CE 02 எலெக்ட்ரிக் மொபட்... கான்செப்ட் மாடலாக அறிமுகம்!

உலகளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்தத் தொடங்கியிருக்கின்றது. இதுமாதிரியான சூழ்நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களைக் கவரும் வகையில் களமிறக்கி வருகின்றன. இதனடிப்படையில் தற்போது கான்செப்ட் மாடலாக அறிமுகமாகியிருக்கும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் சிஇ 02 எலெக்ட்ரிக் மிக விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Bmw motorrad reveals electric moped concept ce 02 here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X