பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவர்தாங்க உண்மையான டூ-வீலர் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

நடிகர் ஜான் ஆபிரகாம் இடத்தில் இருக்கம் பைக் கலெக்சன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய கராஜில் என்ன பைக்குகள் இருக்கின்றன என்பதன் வீடியோ மற்றும் பிற தகவல்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் ஜான் ஆபிராம். இவர், நடிப்பின் மீது மட்டுமல்ல வாகனங்களின் மீதும் அளவு கடந்த மோகம் கொண்டவராக இருக்கின்றார். குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் மீது அளவுகடந்த கடந்த காதலை இவர் கொண்டிருக்கின்றார். இதற்கு அவர் வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களின் கலெக்சன்களே சான்று.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் இடத்தில் பல விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் உள்ளன. பட்ஜெட் ரக இருசக்கர வாகனங்கள் தொடங்கி மிகவும் விலையுயர்ந்த ஆடம்பர மோட்டார்சைக்கிள்கள் வரை பல அவரிடம் பயன்பாட்டில் இருக்கின்றன. அதாவது, கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke) பைக் தொடங்கி டுகாட்டி பனிகேல் (Ducati Panigale) போன்ற மிக மிக அதிக விலைக் கொண்ட இருசக்கர வாகனங்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

இவற்றை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் ஓர் வீடியோவை வ்ளாக்கர் ஃப்ளையிங் பீஸ்ட் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. அவ்வீடியோவில், ஜான் ஆபிரகாம் கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-14ஆர் (Kawasaki Ninja ZX-14R) பைக்கை ஓட்டி வருவதைப் போன்ற காட்சிகளும், அவரின் கராஜில் என்ன மாதிரியான பைக்குகள் இருக்கின்றன என்பது பற்றிய காட்சிகளும் அடங்கியுள்ளன.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-14ஆர்

நடிகர் ஜான் ஆபிரகாம் வைத்திருக்கும் மிகவும் அதிக விலைக் கொண்ட பைக்குகளில் ஒன்றாக அவர் ஓட்டி வந்த கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-14ஆர் பைக் இருக்கின்றது. இது ஓர் சூப்பர் ஸ்போர்ட் டூரிங் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கின் இந்திய மதிப்பு ரூ. 19.7 லட்சம் ஆகும். தான் நடப்பதைவிட இருசக்கர வாகனத்தில் பயணிப்பதையே அதிகம் விரும்புவதாக நடிகர் தெரிவித்துள்ளார்.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

அதே நேரத்தில் தான் எப்போதுமே இருசக்கர வாகனத்தில் குறைந்த வேகத்தில் மட்டுமே பயணிப்பதாகவும், அதிக வேகத்தில் பயணிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிந்து பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கேற்ப வ்ளாக்கர் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் இருவரும் தலைக்கவசம் அணிந்தே இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தனர்.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

ஜான் ஆபிரகாம் ஓர் சான்றிதழ் பெற்ற சூப்பர் பைக் ரைடர்

நடிகர் ஜான் ஆபிரகாம் சான்றிதழ் பெற்ற சூப்பர் பைக் ரைடர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இவர் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள சூப்பர் பைக் பள்ளியில் சேர்ந்து இதற்கான சான்றிதழைப் பெற்றிருக்கின்றார். இருசக்கர வாகனங்களின் மீதான அதீத காதல் அவரை இதுமாதிரியான செயலுக்கு உந்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

ஜான் ஆபிரகாம் ரேசிங் டிராக்குகளில் மட்டுமே அதிக வேகத்தில் பயணிப்பதாகவும், பொதுசாலையில் அரசு வகித்த குறிப்பிட்ட வேகத்தில் பயணிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். இது அவர் சான்று பெற்ற சூப்பர் பைக் ரைடர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், தான் கற்ற கலைகள் சிலவற்றை அவர் செய்து காட்டினார். வீலிங் போன்ற ஸ்டண்டுகளை அவர் செய்தார்.

பத்துக்கும் மேற்பட்ட சூப்பர் பைக்குகள்

ஜான் ஆபிரகாம் இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட சூப்பர் பைக்குகள் உள்ளன. யமஹா வி-மேக்ஸ் (Yamaha V-MAX), ஹேண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர்-ஆர் (Honda CBR1000RR-R), யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1 (Yamaha YZF-R1), டுகாட்டி பனிகேல் (Ducati Panigale), எம்வி அகுஸ்டா எஃப்3 800 (MV Agusta F3 800), கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke), பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் (BMW S1000RR), அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்எஃப் (Aprilia RSV4 RF), டுகாட்டி டையாவல் (Ducati Diavel), சுசுகி ஜிஎஸ்எக்-1000ஆர் (Suzuki GSX-1000R), சுசுகி ஹயபுசா (Suzuki Hayabusa) மற்றும் இன்னும் பல சூப்பர் மற்றும் வழக்கமான மோட்டார்சைக்கிள்களை அவர் வைத்திருக்கின்றார்.

பைக்கை வாங்கி குவிச்சு வச்சிருக்காரு! இவருதாங்க உண்மையான மோட்டார்சைக்கிள் லவ்வர்! வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!

அதாவது, யமஹா ஆர்டி350 (Yamaha RD350), யமஹா எஃப்இசட் வி2 (Yahama FZ V2) போன்ற விலைக் குறைவான மோட்டார்சைக்கிள் மற்றும் மாடிஃபை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களான ராஜ்புத்னா கஸ்டம்ஸ் லைட்ஃபூட் (Rajputana Customs Lightfoot) மற்றும் புல் சிட்டி கஸ்டம்ஸ் அகுமா (Bull City Customs Akuma) ஆகியவற்றையும் நடிகர் ஜான் ஆபிரகாம் வைத்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood actor john abraham bike collection video
Story first published: Thursday, November 4, 2021, 10:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X