குவிந்த புக்கிங்! இப்பவே 36000 புக்கிங் கிடைச்சிருச்சாம்! பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

பூம் கார்பெட் (Boom Corbett) இ-பைக்கிற்கு இந்தியாவில் அமோக வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த இ-வாகனத்தை மிக விரைவில் விற்பனையாளர்களுக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

கோயம்பத்தூரை மையமாகக் கொண்டு உயர்-ரக மின் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம் பூம் மோட்டார்ஸ் (Boom Motors). இந்நிறுவனம் பூம் கார்பெட் (Boom Corbett) இ-பைக்கிற்கு மிக சமீபத்தில் புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியது. இந்த வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு கிடைப்பதாக நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

36 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் இவ்வாகனத்திற்கு கிடைத்ததாக நிறுவனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கார்பெட் இ-பைக்கை டெலிவரிக்காக விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

இவ்விரு தகவல்களும் கார்பெட் இ-பைக்கை புக் செய்துவிட்டு காத்திருப்போருக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் மின்சார இருசக்கர வாகனத்திற்கு அதிக புக்கிங் கிடைத்திருப்பதும், ஜனவரி மாதத்திற்கு தாங்கள் புக் செய்த வாகனம் தங்களின் கைகளுக்கு கிடைத்தும் என்கிற தகவல்களே அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்பெட் இ-பைக்கிற்கு புக்கிங் கிடைத்திருக்கின்றது. இது ஓர் ஸ்வாப்பபிள் பேட்டரி கொண்ட மின்சார இருசக்கர வாகனமாகும். பூம் நிறுவனத்தின்கீழ் 60 விற்பனையகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வாயிலாக மிக விரைவில் பூம் கார்பெட் இ-பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

நிறுவனம் கார்பெட் இ-பைக்கை டெலிவரி கொடுப்பதில் மட்டுமில்லைங்க தனது விற்பனையகங்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் பணிகளையும் மிக தீவிரமாக மேற்கொள்ள இருக்கின்றது. இதன்படி, மிக விரைவில் 250க்கும் அதிகமான விற்பனையகங்கள் 2022ம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்பட இருக்கின்றன.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

இதுகுறித்து பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில், "கோயம்புத்தூரில் உள்ள உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவதன் மூலம் அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டுவதை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது" என்றார். தற்போது கோயம்புத்தூரில் ஆண்டுக்கு 1,00,000 யூனிட்டுகள் தயாரிப்பு என்ற இலக்கில் செயல்பட்டு வருகின்றது.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

கார் இ-பைக் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கார்பெட் 14 மற்றும் கார்பெட் 14 இஎக்ஸ் எனும் இரு விதமான தேர்வுகளிலேயே கிடைக்க இருக்கின்றது. இதில், கார்பெட் 14 தேர்வில் 2.3 kWh பேட்டரியும், 4.6 kWh பேட்டரி கார்பெட் 14 இஎக்ஸ் தேர்விலும் வழங்கப்படுகின்றது. இதன் உச்சபட்ச ரேஞ்ஜ் 200 கிமீ ஆகும்.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

இந்த அதிக திறனை கார்பெட் மின்சார-பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் தரமான வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதன் பேட்டரி கழட்டி மாட்டும் வசதிக் கொண்டவை ஆகும். எனவே, இதனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் முதல் 4 மணி நேரங்கள் வரை தேவைப்படும்.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

கார்பெட் 14 தேர்வின் உச்ச வேகம் மணிக்கு 65 கிமீ ஆகும். இதன் மற்றுமொரு தேர்வான கார்பெட் 14 இஎக்ஸ் தேர்வு மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லும். தொடர்ந்து, இவ்வாகனம் அதிகபட்சமாக 200 கிலோ வரையில் எடையைத் தாங்கும். இதுமட்டுமில்லைங்க எக்ஸோ ஸ்கெலிடல் இரட்டை கிரேடில் சேஸிஸ் அமைப்பில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

இந்த சேஸிஸ் உயர் டென்ஸைல் உலோகத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், மோதல், பேரண்டல் மோட் மற்றும் திருட்டு தவிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் விலையும் சற்றே குறைவானதாக காட்சியளிக்கின்றது. கார்பெட் 14க்கு ரூ. 86,999 என்ற விலையும், கார்பெட் 14 இஎக்ஸ் தேர்விற்கு ரூ. 1.19 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

குவிந்த புக்கிங்... இப்போவே 36,000 புக்கிங் கிடைச்சிருச்சாம்... பூம் கார்பெட் இ-பைக்கிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு! ரொம்ப அதிக ரேஞ்ஜ் தரும்!

இது அறிமுக விலை மட்டுமே ஆகும். இந்த சலுகை முடிவடைந்த பின்னர் ரூ. 89 ஆயிரம் தொடங்கி ரூ. 1.24 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த வாகனத்தை ரூ. 1,699 என்ற இஎம்ஐ தொகையில் இருந்து விற்பனைக்குக் வழங்கப்பட இருக்கின்றது. பெட்ரோலால் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு செய்யப்படும் செலவைக் காட்டிலும் இது பல மடங்கு குறைவானதே ஆகும்.

Most Read Articles
English summary
Boom corbett e bike gets 36000 bookings here is full details
Story first published: Thursday, December 30, 2021, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X