Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புல்லட் ப்ரூஃப் காரை ஒதுக்கிவிட்டு வேறொரு காரில் பயணித்த மத்திய அமைச்சர்... காரணம் என்ன தெரியுமா?
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஒதுக்கிவிட்டு மின்சார கார் ஒன்றில் பயணித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

நாட்டில் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்புடன் கூடிய, புல்லட் ப்ரூஃப் திறன் கொண்ட கார்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்காக வழங்கப்படுகின்றன. அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தால் அதிக பாதுகாப்பு வசதியுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு வழங்கப்பட்ட காரே டொயோட்டா ஃபார்ச்சூனர். இக்காரையே தனது சொந்த மாநில விசிட்டின்போது அவர் ஒதுக்கியாதக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, உள்ளூர் (நாக்பூர்) பயணத்தின்போது புதுமுக மின்சார கார்களில் ஒன்றான எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி மின்சார காரை அவர் பயன்படுத்தினார். மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இக்காரை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. எனவேதான், புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட ஜன்னல் கண்ணாடிகளைக் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அமைச்சர் ஒதுக்கியிருக்கின்றார்.

அதேசமயம், இந்த காரை அவர் நிரந்தரமாக ஒதுக்கிவிட்டாரா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. தொடர்ந்து, அமைச்சரின் பயன்பாட்டிற்காக இந்த மின்சார கார் வங்கப்பட்டதா என்பது பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், தனது அதிக பாதுகாப்பு வசதிக்கொண்ட காரை தள்ளி வைத்துவிட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எம்ஜி இசட்எஸ் இவி மின்சார காரில் பயணித்திருக்கின்றார்.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் காற்று மாசு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதாக அபாய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலேயே மத்திய, மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களுக்கு முன்னோடியாக திகழும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எம்ஜி இசட்எஸ் மின்சார காரைப் பயன்படுத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஹலோல் பிளாணட்டில் வைத்தே இசட்எஸ் மின்சார கார்களை எம்ஜி நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டுதான் இக்காரை முதல் முறையாக நாட்டில் அறிமுகப்படுத்தியது. அப்போது இக்காரின் அறிமுக நிகழ்ச்சியின்போதும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொடர்ந்து, இக்காரை முதல் முறையாக டெலிவரி வழங்கும் நிகழ்விலும் கலந்துக் கொண்டு பங்காற்றினார். எம்ஜி இசட்எஸ் மின்சார கார் இந்தியாவில் ரூ. 20.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை மாடலின் விலை மட்டுமே ஆகும். இந்த மின்சார காரின் உயர்நிலை மாடலின் விலை ரூ. 24.18 லட்சம் ஆகும்.

இக்காரில், மின்சார திறனுக்காக உயர் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 44.5kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபி6 தர மதிப்பு சான்று பெற்றதாகும். தூசி மற்றும் தண்ணீரால் எந்தவித பாதிப்பையும் இது சந்திக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 141 பிஎச்பி மற்றும் 353 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மின் மோட்டார் வெறும் 8.5 செகண்டில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டது. இதேபோன்று இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 419 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தேவைப்படும். அதுவே, ஃபாஸ்ட் சார்ஜ் மூலம் மின்னேற்றம் செய்யும்போது 50 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இந்த சிறப்பு வாய்ந்த காரைத் தொடர்ந்து 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும் புதிய மின்சார காரையும் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக எம்ஜி நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டது.