ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்

பல மாதங்களாக வரும் ஆனா வராது என்பதுபோல் இருந்த சிஎஃப் மோட்டோ 300என்கே பிஎஸ்6 பைக் ஒரு வழியாக ரூ.2.29 லட்சம் என்ற விலையில் அறிமுகம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீன பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் மற்ற சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் 300என்கே பைக் மாடலை இந்தியாவில் கிட்டத்தட்ட அதன் முந்தைய பிஎஸ்4 வெர்சனின் விலையிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்

முன்பக்கத்தில் குறைவான கழுத்து பகுதியுடன் முழு-எல்இடி ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள இந்த சிஎஃப் மோட்டோ பைக் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சற்று பெரிய வடிவத்தில் பெட்ரோல் டேங்க், மேல் நோக்கி வடிவமைக்கப்பட்ட பின்பக்க வால்பகுதி, மிகவும் சிறியதான எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்

பின்பக்கத்தில் நம்பர் ப்ளேட் ஃபெண்டரில் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் 5-ஸ்போக் டிசைனில் உள்ளன. பெயிண்ட் மற்றும் கிராஃபிக்ஸ் கேடிஎம் பைக்குகளுக்கே சவால்விடும் வகையில் உள்ளதை நீங்களே பார்க்கிறீர்கள்.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்

சஸ்பென்ஷன் பணியை கவனிக்க முன்பக்கத்தில் தலைக்கீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க்குகள் உள்ளன.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்

பயணிகளின் பாதுகாப்பை உறுதிச்செய்யும் வகையில் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் என்ஜின் அமைப்பு குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்

நமக்கு தெரிந்தவரை சர்வதேச சந்தைகளில் வழங்கப்படும் அதே 292.4சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் தான் பொருத்தப்படும். முந்தைய பிஎஸ்4 வெர்சனில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 33.5 பிஎச்பி மற்றும் 20.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 2, 2021, 19:15 [IST]
English summary
CFMoto 300NK BS6 Launched In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+