இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

செயல்திறனில் மிகவும் அசத்தலான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்க சிஎஃப்மோட்டோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

சீனாவை சேர்ந்த சிஎஃப்மோட்டோ நிறுவனம் இந்தியாவில் பிரிமீயம் வகை பைக் மாடல்களை விற்பனை செய்வதற்கான திட்டத்துடன் வர்த்தகத்தை செய்து வருகிறது. அண்மையில் பிஎஸ்-6 எஞ்சினுடன் கூடிய தனது 300என்கே என்ற நேக்கட் வகை பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இதன் ஃபேரிங் பேனல்கள் கொண்ட 300எஸ்ஆர் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

அடுத்து 650 சிசி பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கும் சிஎஃப் மோட்டோ நிறுவனம் மின்சார வாகன மார்க்கெட்டிலும் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, அடுத்து ஒரு மாஸ்டர் பிளானையும் இந்தியாவுக்காக வைத்துள்ளது.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக வரவேற்பும், வர்த்தக வளமும் இருப்பதை கண்டு உணர்ந்து கொண்டுள்ளது சிஎஃப்மோட்டோ. இதற்காக, தனது கீழ்செயல்பட்டு வரரும் ஸீஹோ நிறுவனத்தின் சைபர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஸிக்வீல்ஸ் தள செய்தி தெரிவிக்கிறது.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

இந்த ஸ்கூட்டரை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிஸ்கா டிசைன்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதாவது, கேடிஎம் பைக்குகளை வடிவமைத்து கொடுக்கும் அதே நிறுவனம்தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் வடிவமைத்துள்ளது.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

இதனால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய ஸீஹோ சைபர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலாக வெளியிடப்பட்டது. இதன் தயாரிப்பு நிலை மாடலாக இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிக அசத்தலாக இருக்கிறது. கேடிஎம் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தால் எப்படி இருக்கும் என்பது போன்றே, இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பேனல் இடம்பெற்றுள்ளன. முன்புற டிசைனும் மிகவும் சிறப்பாக உள்ளது.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

புதிய ஸீஹோ சைபர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபராசிஸ் எனெர்ஜி நிறுவனம் இந்த பேட்டரியை உற்பத்தி செய்து கொடுக்க உள்ளது. இதனுடன் 10kW வாட்டர் கூல்டு சிஸ்டம் கொண்ட மின் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ஸ்கூட்டர் 13.4 பிஎச்பி பவரையும், 213 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்குகிறது சிஎஃப்மோட்டோ?

செயல்திறனில் மிகச் சிறப்பாக வரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 0 - 50 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 15, 2021, 14:14 [IST]
English summary
According to report, CFMoto is planning to launch new electric scooter in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+