சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

சமையற்கலைஞர் ஒருவர் தனது அசாத்திய திறன்மூலம் முழுக்க முழுக்க சாக்லேட்டாலேயே க்ரூஸர் ரக பைக்கை உருவாக்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

வாகனங்களின் மீது அதீத பிரியம் கொண்ட சிலர் தங்களுக்கு பிடித்தமான வாகனங்களை புகைப்படமாகவோ அல்லது பொம்மை வாகனமாகவோ வாங்கி தங்களின் தனிப்பட்ட அறையை அலங்கரித்துக் கொள்கின்றனர். ஒரு சிலர் தங்களது அலுவலக மேசையைக் கூட விட்டு வைக்காமல் ஸ்கேல் மாடல்களைக் கொண்டு முழுவதுமாக அலங்கரித்து விடுகின்றனர்.

சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

இம்மாதிரியான சூழ்நிலையில் வாகன ஆர்வலர்களைக் கவரும் வகையில் ஓர் சமையற்கலைஞர் சாக்லேட்டால் பைக்கை உருவாக்கியிருக்கின்றார். தனது அசாத்திய திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த சாக்லேட் பைக்கை அவர் உருவாக்கியிருக்கின்றார். முன்னாதக வீடு, பிரபலங்களின் உருவம் என சாக்லேட்டுகளால் பல்வேறு விநோத படைப்புகள் உருவாக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது இருசக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

இளைஞரின் இந்த முயற்சி வாகன ஆர்வலர்கள் மற்றும் சாக்லேட் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவைச் சேர்ந்தவர் அமவுரி குய்சன் (Amaury Guichon). இவர், இனிப்பு மற்றும் மாவுசார்ந்த பண்டங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்.

சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

இதுமட்டுமின்றி, தான் தயாரிக்கும் உணவுகளுக்கு விநோத உருவத்தைக் கொடுப்பதிலும் இவர் மிக தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றார். அந்தவகையில் முன்னதாக டெலிஸ்கோப், யானை போன்றவற்றை சாக்லேட்டால் உருவாக்கியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்தே, தற்போது சாக்லேட்டால் மோட்டார்சைக்கிளை அவர் வடிவமைத்துள்ளார்.

சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

உண்மையான மோட்டார்சைக்கிளைப் போலவே காட்சியளிக்கும் இது முழுக்க முழுக்க சாக்லேட்டைத் தவிர வேறெந்த பொருளுமின்றி உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே சாக்லேட்டைத் தவிர பிற எந்த பொருளையும் இதில் காண முடியாது. மேலும், இது ஓர் உண்ணத் தகுந்த சாக்லேட் என்பதும் கூடுதல் சிறப்பான தகவலாக அமைந்துள்ளது.

சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

ஆமாங்க, இதனை உண்ணக் கூடிய சாக்லேட்டால் மட்டுமே குயிசன் உருவாக்கியிருக்கின்றார். மேலும், இதன் நிறத்திற்காக ஃபூட் (Food) நிறங்களை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை விளக்கக் கூடிய வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குயின்சன் வெளியிட்டிருக்கின்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இது ஓர் குறுகிய வீடியோ ஆகும். இவரின் நீண்ட வீடியோக்கள் யுட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட க்ரூஸர் ரக பைக்... இதை நாம் சாப்பிடலாம்... நம்ப முடியலையா வீடியோ பாருங்க!!

சாக்லேட் வாயிலாக உருவாக்கப்பட்டிருக்கும் மோட்டார்சைக்கிள் ஓர் க்ரூஸர் ரக பைக்காகும். இதற்கான பிரத்யேக சிலிண்டர்கள், எஞ்ஜின் கேஸ், ஹெட்லைட், எக்சாஸ்ட், வீல் மற்றும் ஸ்போக் கம்பிகள் என அனைத்துமே சாக்லேட்டாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து, டிஸ்க் பிரேக் மற்றும் இருக்கை உள்ளிட்டவற்றையும் இவர் சாக்லேட்டைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றார். இதெல்லாம் சரி, இதன் ஹெட்லைட்டில் கண்ணாடி போன்று ஓர் கூறு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எந்த சாக்லேட்டைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். இந்த பாகத்திற்காக சக்கரை கூழ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்தும் உண்ணத் தகுந்த பொருட்களால் மட்டுமே இப்பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chocolate Cruiser Bike Assembled By Pastry Chef Amaury Guichon. Read In Tamil.
Story first published: Wednesday, February 10, 2021, 9:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X