பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்

குறிப்பிட்ட மாநில அரசு பெட்ரோல் இருசக்கர வாகன ஓட்டிகள் சந்தித்து வரும் அதிக விலை சிக்கலைக் குறைக்கும் பொருட்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 25 நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வண்ணம் இருக்கின்றது. சமீப சில காலமாக மட்டுமே இவற்றின் விலை உயர்த்தப்படாமல் இருக்கின்றது. இதன் விலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயரலாம் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து நிற்கின்றனர்.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

தொடர்ந்து, அதிக விலையில் எரிபொருட்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருவதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றே கூறலாம்.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

இந்த அவலை நிலையைக் குறைக்கும் பொருட்டு ஒன்றிய அரசு அண்மையில் பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அவற்றின் விலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூ. 100-ஐக் கடந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

இத்தகைய சூழலால் தங்கள் மாநில மக்கள் கடுமையமாக பாதிப்படைந்து வருகின்றனர் என கூறி ஓர் மாநில அரசு, பெட்ரோலின் விலையை மட்டும் விரைவில் குறைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. ஏழை, எளியோர் மட்டும் பயன் பெறும் வகையில் இந்த நடவடிக்கையை எடுக்க இருப்பதாக அரசு தெரிவித்திருக்கின்றது. ஆமாங்க, நீங்க நினைப்பது சரிதான் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் விலை குறைக்கப்பட இருக்கின்றது.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

ஜார்காண்ட் மாநிலத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவின் வாயிலாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்திருக்கின்றார். டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது,

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

"பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாநில அளவில் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றிற்கு ரூ. 25 நிவாரணம் வழங்கப்படும். அதன் பலன் 26 ஜனவரி 2022 முதல் தொடங்கும்" என்று கூறியிருக்கின்றார்.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு அம்மாநில மக்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, தினசரி இருசக்கர வாகனங்களை நம்பி தங்களின் பிழைப்பை நடத்தி வருவோர் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

இன்றைய (டிசம்பர் 29) தேதி நிலவரப்படி, பெட்ரோல் - டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 91.43 ஆகவும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது சென்னை விற்பனை நிலவரம் ஆகும். இந்த மாதிரியான அதிக விலை பார்த்தைக் குறைக்கும் பொருட்டே ஜார்காண்ட் மாநில அரசு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலையைக் குறைக்கும் நடவடிக்கையைக் கையிலெடுத்திருக்கின்றது.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

ஜார்காண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஓர் இருசக்கர வாகன பிரியர் என கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரிடத்தில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவரிடத்தில் ஜாவா கிளாசிக் மோட்டார்சைக்கிள்கூட பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த பைக்கை ஜாவா நிறுவனம், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க திட்டம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்! ஆனா டூ-வீலர்களுக்கு மட்டும்!

இந்த பைக்கில் 293 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். ​​ஜாவா கிளாசிக், கிளாசிக் 350ஐயைக் காட்டிலும் மென்மையானதாகவும், குறைந்த அதிர்வுகளை மட்டுமே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய திறன் கொண்ட பைக்கையே ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வைத்திருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cm hemant soren planning to give relief of rs 25 per liter on petrol for two wheelers
Story first published: Wednesday, December 29, 2021, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X