மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் காப்பர்நிகஸ் மொபிலிட்டி நிறுவனம் இரு புதுமுக இ-பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இ-பைக்குகள் பற்றிய முக்கிய தகவல்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்ப நிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் காப்பர்நிகஸ் மொபிலிட்டி. இந்நிறுவனம் புதிதாக இரு இ-பைக்குகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

க்யூபிட் எக்ஸ் 1 மற்றும் க்யூபிட் எக்ஸ் 2 ஆகிய இரு மாடல்களையே நிறுவனம் நாட்டின் மின் வாகன சந்தையில் காப்பர்நிகஸ் மொபிலிட்டி களிறக்கியிருக்கின்றது. இந்த புதுமுக இ-பைக்குகளில் மிக தனித்துவமான வசதியாக மடித்து வைத்துக் கொள்ளும் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

அதாவது, தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இ-பைக்குகளை தேவைப்படாத சமயங்களில் மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த பிரத்யேக வசதி மின்சார வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

இதேபோன்று இ-பைக்குகளில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களும் அனைவரையும் கவரும் வகையிலேயே இருக்கின்றது. க்யூபிட் எக்ஸ்1 இ-பைக்கில் 36வோல்ட் 5.2 ஏஎச் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தோமேயானால் சுமார் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

இ-பைக்கில் 250வாட் திறன் கொண்ட மின் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு உச்சபட்சமாக 25 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இத்துடன், க்யூபிட் எக்ஸ்1 இ-பைக்கில் 16 இன்சிலான வீல், பேட்டரியின் சார்ஜ் அளவைக் காண உதவும் சிறிய திரை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

இதேபோன்று, க்யூபிட் எக்ஸ்2 இ-பைக்கிலும் சில சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எக்ஸ்1 மாடலைக் காட்டிலும் சற்று கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. 20 இன்சிலான வீல், 35 கிமீ ரேஞ்ஜ் (வீச்சு), 7 ஸ்பீடு ஷிமனோ கியர்பாக்ஸ் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

இவற்றைக் காட்டிலும் இந்த இ-பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் மடித்து வைக்கும் வசதியே பலரைக் கவரும் அமைந்திருக்கின்றது. அவ்வாறு மடிக்கும்போது இதனை பத்திரப்படுத்த ஓர் பெரிய அளவுள்ள சூட்-கேஸே போதுமாம். தொடர்ந்து, இ-பைக்கில் ஐந்து விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

க்ரூஸ், த்ரோட்டில், பிஏஎஸ், பெடல் மற்றும் வால்க் ஆகிய மோட்களே இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், க்ரூஸ் மற்றும் வால்க் ஆகிய இரு மோட்களும் இதுவரை எந்த இ-பைக்குகளிலும் இடம்பெறாத ஒன்றாக இருக்கின்றது.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

மேலும், எக்ஸ்1 மற்றும் எக்ஸ்2 இ-பைக்குகளில் ஃப்ளாஷ் மின் விளக்கு, முன்பக்க மின் விளக்கு, டூல், எதிரொலிப்பான்கள் மற்றும் கிக் ஸ்டாண்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது. இதனை 95 சதவீதம் கட்டமைத்துக் கொள்ளும் வகையில் ஆன்-லைன் வழியாக டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

எப்படி?, எந்த பாகத்தை எங்கு பொருத்துவது?, என அனைத்து வழிகாட்டுதல்களையும் நிறுவனமே வழங்கும். தொடர்ந்து, கூடுதலாக தனி கட்டணத்தில் அலங்காரப் பொருட்களை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கூடை, பொருட்களை வைப்பதற்கான சட்டம், உயர்திறன் பேட்டரி உள்ளிட்டவற்றை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

உயர்திறன் பேட்டரி தேர்வின் வாயிலாக 120கிமீ வரையிலான ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரியை நிறுவனம் வழங்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. க்யூபிட் எக்ஸ்1 இ-பைக்கிற்கு ரூ. 52,490 என்ற விலையையும், க்யூபிட் எக்ஸ்2 மாடலுக்கு ரூ. 69,990 என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

மடிச்சி பேக்ல வச்சுக்கலாம்... பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான இ-பைக்... விலை எவ்ளோ தெரியுமா?..

இவை குறைந்த வேக திறன் கொண்ட மின் வாகனம் என்பதால் பதிவு சான்று, பதிவெண், லைசென்ஸ் போன்ற எந்த ஆவணமும் அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வசதியின் காரணமாக இந்த இ-பைக் கூடுதல் கவனத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Coppernicus Mobility Launched Qubit X1 And X2 Foldable e-Bikes. Read In Tamil.
Story first published: Friday, June 4, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X