இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

இருசக்கர வாகனத்தில் விதிமீறி வந்த அரசியல்வாதி ஒருவருக்கு காவல்துறையினர் ரூ. 11 ஆயிரம் அபாரதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோரத் தாண்டவமாட்டம் ஆடி வருகின்றது. எண்ணற்ற உயிர்கள் நாள்தோறும் இவ்வைரஸ் தாக்கம் காரணமாக பரிதாபமாக பலியாகி வருகின்றன. இந்த அவல நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என கடுமையான விதிகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

பேரிடர் கால விதிகளை மீறுவோர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கொடிய வைரஸ் கொரோனாவின் அதி-வேக பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கசப்பான நடவடிக்கை அரசுகள் எடுத்து வருகின்றன.

இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

இருப்பினும், பலர் விதிகளை மீறிய வண்ணம் இருக்கின்றன. தேவையற்ற நிலையில் வாகனங்களில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்கள்மீது கடுமையான நடிவடிக்கை எடுக்கும் விதமாக உச்சபட்ச அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.

இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

இந்த நிலையிலேயே இருசக்கர வாகனத்தில் கொரோனா அச்சம் இன்றி கூலாக வந்தவருக்கு காவல்துறைக்கு ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நாட்டின் எந்த மாநிலத்தில் அரங்கேறியது என்பது துள்ளியமான விபரம் தெரிய வரவில்லை.

இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

இருப்பினும், அபராதத்தைப் பெற்ற அந்நபர் காவலர்களிடத்தில் தன்னை ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என அறிமுகப்படுத்திக் கொள்வது மற்றும் மாஸ்க், ஹெல்மெட் என எந்த பாதுகாப்பு கவசமும் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்திருப்பதை வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

இந்த காரணங்களுக்காகவே காவல்துறையினர் அந்நபருக்கு (விதிமீறல் வாதிக்கு) உச்சபட்சமாக ரூ. 11 ஆயிரத்திற்கான அபராதத்தை வழங்கியிருக்கின்றனர். உடைந்த நம்பர் பிளேட்டை பயன்படுத்தியது, நான்கு இலக்க எண்கள் மட்டுமே பதிவெண்ணில் இருந்தது, ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட வாகனம் சார்ந்த விதிமீறல்களுக்கு ரூ. 10 ஆயிரமும், மாஸ்க் அணியாமல் வெளியில் வந்ததற்கு ரூ. 1000ம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த போலீஸ்... எதுக்காகனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!

தான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என போலீஸாரை அச்சுறுத்தும் வகையில் அந்நபர் கூறியும் காவல்துறையினர் சிறிதும் தயக்கமின்றி உச்சபட்ச அபராதத்திற்கான செல்லாணை வழங்கி அவரை அனுப்பி வைத்தனர். இத்துடன், வாகனத்தையும் பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image Courtesy: News Times 24

அரசியல்வாதிகள் என்ற போர்வைக்குள் ஒழிந்துக்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு இந்த சம்பவம் ஓர் பாடமாக அமைந்துள்ளது. மேலும், விதிமீறல் வாதிகளின் வயிற்றில் இச்சம்பவம் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cops Fined Political Leader Rs.11,000 For Not Wearing Helmet, Mask. Read In Tamil.
Story first published: Wednesday, June 2, 2021, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X