2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

டுகாட்டி நிறுவனம் 2021 சூப்பர்ஸ்போர்ட் 950 பிஎஸ்6 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

புதிய 2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 மோட்டார்சைக்கிள் ரூ.13.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் மற்றும் எஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்த புதிய டுகாட்டி பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.13.49 லட்சம் என்பது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் விலையாகும்.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

எஸ் வேரியண்ட்டிற்கான விலையாக ரூ.15.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ளன. 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக யூரோ5/ பிஎஸ்6க்கு இணக்கமான புதிய என்ஜினை பெற்றது மட்டுமில்லாமல் ரீடிசைனில் தோற்றம் மற்றும் புதிய தொழிற்நுட்பங்களையும் 2021 சூப்பர்ஸ்போர்ட் 950 மோட்டார்சைக்கிள் பெற்று வந்துள்ளது.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

அப்டேட் செய்யப்பட்ட சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் அதன் டைனாமிக் தோற்றத்திற்கு ஏற்ப முற்றிலும் திருத்தியமைக்கப்பட்ட பேனல்களை கொண்டுள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது காற்று இயக்கவியலுக்கான புதிய துளைகள் நம்மை வசீகரிக்கின்றன. இரட்டை பிரித்தெடுப்பான்கள் டுகாட்டி பனிகளே வி4 பைக்கை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

பனிகளே மோட்டார்சைக்கிள் வரிசையின் ரேசிங் வெர்சன் தான் புதிய சூப்பர்ஸ்போர்ட் 950 ஆகும். பைக்கின் டிசைனில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சமாக, பைக்கின் தாழ்வான பேனல்கள் இம்முறை என்ஜின் பாகங்களை மறைத்தப்படி எக்ஸாஸ்ட் குழாய் வரையில் வழங்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

2021 சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கிற்கு ஆர்டிக் வெள்ளை மற்றும் டுகாட்டி சிவப்பு என்ற இரு விதமான நிறத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கில் பிஎஸ்6-க்கு இணக்கமான 937சிசி, L-இரட்டை சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 108.6 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 93 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கில், சேசிஸில் என்ஜினை நிலையான பாகமாக கொண்ட ட்ரெல்லிஸ் ஃப்ரேம் வழங்கப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

இந்த குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட சட்டகம் அதிக காம்பெக்ட் விறைப்பு மற்றும் இலகுவான எடையில் இந்த 2021 மோட்டார்சைக்கிளை அளவில் சிறியதாக உருவாக்க டுகாட்டி நிறுவனத்திற்கு உதவியாக இருந்துள்ளது. சஸ்பென்ஷனுக்கு டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 மாடலின் ஸ்டாண்டர்ட்டில் முன்பக்கத்தில் 43மிமீ-இல் யுஎஸ்டி மார்சோச்சி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

அதுவே டாப் ‘எஸ்' ட்ரிம் நிலையில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹோலின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றுள்ளது. புதிய ரைடு-பை-வயர் அமைப்பானது ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என்ற மூன்று விதமான ரைடிங் மோட்களை வழங்குகிறது. இவை மூன்றிலும் ஒவ்வொரு விதமான என்ஜின் ஆற்றல் வெளியீடு கிடைக்குமாம்.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

அதேபோல் ஏபிஎஸ், டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் டுகாட்டி வீலிங் கண்ட்ரோல் போன்ற ஓட்டுனர் உதவி செயல்பாடுகளையும் ஓட்டுனர் தனது விருப்பத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். பனிகளே போன்று அல்லாமல் தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஸ்போர்ட்ஸ் பைக்காக சூப்பர்ஸ்போர்ட் 950-ஐ அறிமுகப்படுத்துகிறோம் என டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுல் சந்த்ரா தெரிவித்துள்ளார்.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

இதற்கு முன்னதாக டுகாட்டி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் 2021 எக்ஸ்டயவெல் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டார்க் & ப்ளாக் ஸ்டார் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை ரூ.22.60 லட்சமாகும்.

2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலையை மட்டும் கேட்காதீங்க!

இதில் ஒன்று பளபளப்பானதாகவும், மற்றொன்று மேட் ஷேடிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு புதிய மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கை டுகாட்டி நம் நாட்டில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் ஆரம்ப விலை எக்ஸ்டயவெல் மாடலை காட்டிலும் சற்று அதிகம் (ரூ.18.99 லட்சம்). இதன் விலைமிக்க வி4 எஸ் வேரியண்ட்டும் விற்பனையில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati launches the hotly anticipated all-new SuperSport 950 in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X