புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்திய சூப்பர் பைக் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் அறிமுகம்... இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் ரெடி!

சூப்பர் பைக் மார்க்கெட்டில் டுகாட்டி பனிகாலே வரிசை மாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்களாக உள்ளன. கடந்த ஆண்டு டுகாட்டி பனிகாலே வரிசையில் வி2 மாடல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வந்த நிலையில், தற்போது அதனைவிட அதிக திறன் வாய்ந்த வி4 மாடல் பிஎஸ்-6 எஞ்சினுடன் 2021 மாடலாக வந்துள்ளது.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 பைக் இரண்டு மாடல்களில் வந்துள்ளது. பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட வி4 மாடலுக்கு ரூ.23.50 லட்சமும், வி4 எஸ் மாடலுக்கு ரூ.28.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் அறிமுகம்... இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் ரெடி!

புதிய டுகாட்டி வி4 பிஎஸ்-6 மாடலில் 1,103சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 13,000 ஆர்பிஎம்,மில் அதிகபட்சமாக 211 பிஎச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்,மில் அதிகபட்சமாக 124 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பை டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் வசதி கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் அறிமுகம்... இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் ரெடி!

டிசைனை பொறுத்தவரையில் பழைய மாடலின் தோற்றத்தில் இருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலுக்கு விசேஷ ஏரோடைனமிக்ஸ் பேக்கேஜை டுகாட்டி வழங்கி இருக்கிறது. இந்த பைக்கின் ஃபேரிங் பேனலில் உள்ள விங்லெட்டுகள் பைக் 270 கிமீ வேகத்தில் செல்லும்போது 30 கிலோ அளவுக்கு டவுன்ஃபோர்ஸ் விசையை வழங்கும்.

மேலும், புதிய ட்வின் பாட் ஹெட்லைட் ஹவுசிங், ஓட்டுனர் இருக்கை, புதிய சைலென்சர், ஒற்றை ஸ்விங்ஆர்ம் அமைப்பு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் அறிமுகம்... இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் ரெடி!

புதிய டுகாட்டி பனிகாலே வி4 பைக்கின் பிஎஸ்6 மாடல்களில் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட், பாஷ் நிறுவனத்தின் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், வீலி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், ஸ்லைடு கன்ட்ரோல் மற்றும் எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் அறிமுகம்... இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் ரெடி!

இந்த இரண்டு மாடல்களிலுமே எல்இடி ஹெட்லைட்டுகள், 5 அங்குல வண்ணத் திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் அறிமுகம்... இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் ரெடி!

இந்த பைக்கில் முன்புறத்தில் ஷோவா போர்க்குகளும், பின்புறத்தில் சாச் நிறுவனத்தின் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. வி4 எஸ் வேரியண்ட்டில் ஓலின்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஷாக் அப்சார்பர் உள்ளன.

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் அறிமுகம்... இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் ரெடி!

அதேபோன்று, முன்புறத்தில் பிரெம்போ மோனாபிளாக் ஸ்டைல்மா (எம்4.30) 4 பிஸ்டன் காலிபர்கள் மற்றும் 330மிமீ ட்வின் டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் இரண்டு பிஸ்டன் காலிபர்கள் மற்றும் 245 மிமீ டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, June 7, 2021, 14:39 [IST]
English summary
Ducati has launched 2021 Panigale V4 bike models with BS6 complaint engine in India at Rs 23.50 lakh.
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+