eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்! Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் eBikeGo நிறுவனத்தின் விநோத உருவம் கொண்ட Rugged மோட்டோ-ஸ்கூட்டர் மின்சார வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

மின்சார இருசக்கர வாகன இயக்கத்தை (Electric two-wheeler mobility platform) மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் eBikeGo. இந்நிறுவனம் இந்தியாவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Rugged எனப்படும் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் ரக வாகனத்தையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

இந்த எலெக்ட்ரிக் வாகனம் நாட்டில் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். G1 மற்றும் G1+ என இவ்விரு தேர்வுகளிலேயே eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் கிடைக்கும். இவற்றிற்கு அண்மையில் அறிமுகமான Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மிகக் குறைவான விலை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

ஆரம்ப நிலை வேரியண்டான G1 தேர்விற்கு ரூ. 79,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் பல மடங்கு குறைந்த விலை ஆகும். Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 99,999 ஆகும்.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

Rugged எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்றும் ஒரு வேரியண்டான G1+-க்கு ரூ. 99,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வேகம் ஆகும். இதுமட்டுமின்றி மிக மேம்படுத்தப்பட்ட ஐஓடி (Internet of Things) தொழில்நுட்பத்தையும் நிறுவனம் இந்த மோட்டோ-ஸ்கூட்டரில் வழங்கியிருக்கின்றது.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

இதன் வாயிலாக 4ஜி இணையம் உள்ளிட்ட எண்ணற்ற சிறப்பு வசதிகளை பெற முடியும். தொடர்ந்து ரீபிளேஸ் செய்யக் கூடிய 1.9 kWh பேட்டரி இந்த எலெக்ட்ரிக்க வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்களே போதும்.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

Rugged மோட்டோ-ஸ்கூட்டரில் 4 பிஎச்பியை வெளியேற்றக் கூடிய 3kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவே மணிக்கு 70 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாகும். தற்போது இந்த மோட்டோ-ஸ்கூட்டருக்கான புக்கிங்கை நிறுவனம் தொடங்கியுள்ளது. மிக விரைவில் இதன் டெலிவரி பணிகளைத் தொடங்க இருக்கின்றது.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

Rugged எலெக்ட்ரிக்க மோட்டோ-ஸ்கூட்டரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 14 இன்சிலான வீல், வட்ட வடிவை முகப்பு மின் விளக்கு, ஒற்றை துண்டு அமைப்பு கொண்ட இருக்கை ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் முழு உருவத்தைப் பார்த்தால் நவீன கால டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டைப் போல் காட்சியளிக்கின்றது.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

இந்த வாகனத்தில் மிக சிறந்த சஸ்பென்ஷன் வசதியை வழங்குவதற்காக ஆன்டி-டைவ் நான்கு முனைகள் கொண்ட அட்ஜெஸ்டபிள் ஷாக் முன் பக்கத்திலும், நான்கு-புள்ளிகள் கொண்ட அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனித்துவமான செல்போன் செயலி, நேவிகேஷன், வாகனம் இருக்கும் இடத்தைக் காண்பிக்கும் வசதி உள்ளிட்டவையும் Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

இந்த Rugged மோட்டோ-ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் வாகனத்தை ஆஃப் செய்யாமலே அதன் பேட்டரிகளை மாற்ற முடியுமாம். இதன் அதிக உறுதியான உடலமைப்பிற்காக கிரேடில் சேஸிஸ், உலகோத்துடன் பயன்படுத்துள்ளது. இந்த தனி சிறப்பு கொண்ட மின்சார வாகனத்தை eBikeGo நிறுவனம் அதன் கோயம்பத்தூர் ஆலையில் வைத்தே தயாரித்து வருகின்றது.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

இந்த ஆலையின் உற்பத்தி திறன் விரைவில் ஆண்டிற்கு ஒரு யூனிட் தயாரிப்பு என்ற திறனுக்கு மாற்றப்பட இருக்கின்றது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மூன்று ஆயிரம் மின்வாகன சார்ஜிங் மையங்களை உருவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

eBikeGo Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட கம்மி விலையில்!

தற்போது விற்பனையாகி இருக்கும் Rugged எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர்களுக்கு 7 வருடங்கள் வரை சேஸிஸ் வாரண்டியும், 3 ஆண்டுகளுக்கு மற்ற அனைத்திற்கும் வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், 20 ஆயிரம் கிமீ வரை பேட்டரி மற்றும் சார்ஜர்களுக்ககு வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் வாரண்டியை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 25, 2021, 16:51 [IST]
English summary
Ebikego rugged electric moto scooter launched in india at rs 79999
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+