துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான Hero Electric, அதன் பணியாளர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளது. அத்திட்டத்தின் பலன்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

கோவிட்-19 வைரஸ் பரவலால் இந்திய வாகன துறை பெரும் சிக்கல்களைச் சந்தித்தது. தற்போதும் எண்ணற்ற இன்னல்களை வாகன துறை சந்தித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலும் தங்களின் ஊழியர்களின் நலனைக் காக்கும் விதமாக சில நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

அந்தவகையில், சிறப்பு காப்பீட்டு திட்டம் வழங்குதல், இலவசமாக நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இத்துடன், நிதியுதவி மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட சேவையிலும் அவை ஈடுபட்டு வருகின்றன.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஓர் தரமான திட்டத்தை Hero Electricநாட்டில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் அதன் பணியாளர்களுக்கு உதவும் வகையில் 'ஹீரோ கேர்' (Hero Care) எனும் திட்டத்தை இந்தியாவில் தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தன்னுடைய பணியாளர்கள் மட்டுமின்றி பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் உதவிகளை வழங்க இருக்கின்றது, Hero Electric.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

இதுகுறித்து Hero Electric நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "ஹீரோ கேர் திட்டத்தின் வாயிலாக தன்னுடைய பணியாளர்களுக்கும், அவர்களின் தன்னம்பிக்க வழங்கப்பட இருக்கின்றது. அவர்களின் கனவுகள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் இத்திட்டம் உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

அதாவது, Hero Electric அதன் ஹீரோ கேர் திட்டத்தின் வாயிலாக தனது பணியாளர்களுக்கு கல்வி நிதியுதவி, வாகன மற்றும் வீட்டு கடன் உள்ளிட்டவற்றை வழங்க இருக்கின்றது. இத்துடன், உடல் நல திட்டங்களும் இத்திட்டத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறும் பணியாளரின் குழந்தைகளுக்கு சிறப்பு உதவித் தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

இந்த சிறப்பு திட்டம் தனது அனைத்து Hero Electric ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களின் நிறுவனத்தில் இணைந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை Hero Electric முன் வைத்துள்ளது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

Hero Electric நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய வாகன துறையை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச் செய்துள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் கோவிட் 19 வைரசிடம் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில் தங்களின் உதவிகளை வழங்கி வருகின்றநிலையில் Hero Electric சற்று மேலே சென்று ஊழியர்களின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

"தங்களின் ஊழியர்களின் உடல் நலம் மட்டுமல்ல அவர்களின் சந்தோஷமும் எங்களுக்கு முக்கியம்" என Hero Electric தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சிறப்பு திட்டங்களின் வாயிலாக தங்களின் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

கோவிட்-19 வைரசைக் காரணம் காட்டி எண்ணற்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தல், அதிக வேலை பளு என அனைத்து நிலைகளிலும் அச்சுறுத்தல்களை வழங்கி வரும் வேலையில், Hero Electric நிறுவனம், தனித்துவமாக தங்களின் ஊழியர்களுக்கு பக்க பலமாக நின்றிப்பது பலரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் தங்களின் ஊழியர்களின் மேற்படிப்பை தொடரவும் நிறுவனம் உதவி செய்ய இருக்கின்றது. 20 முதல் 25 வயது வரை கொண்ட ஊழியர்களின், அவர்களுடைய அடிப்படை படிப்பை பார்த்து மேல் படிப்பு படிக்க கல்வி கடன் மற்றும் ஊக்கத்தொகை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

தொடர்ந்து, அவர்களின் வகுப்பு நேரம் மற்றும் தேர்வு நாட்களைப் பொருத்து சிறப்பு ஷிஃப்ட் டைமிங்கை வழங்க இருப்பதாகவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், புதிதாக திருமணம் செய்து கொண்ட ஊழியரின் துணைக்கும் தங்களின் நிறுவனத்திலேயே பணியமர்த்தும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக Hero Electric அறிவித்துள்ளது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தகுதியின் அடிப்படையில் பணியமர்வு செய்யப்பட இருக்கின்றது. இதேபோல் ஊழியர்களின் பெற்றோர்களுக்கும் சில சிறப்பு திட்டங்களை Hero Electric அறிவித்துள்ளது. மேலும், குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்ப காலங்களில் அரசு வகுத்திருப்பதைப் போல் விடுமுறை மற்றும் பணி நேர மாற்றம் உள்ளிட்டவையும் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

இதுபோன்று இன்னும் பல சிறப்பு திட்டங்களை ஹீரே கேர் திட்டத்தின் வாயிலாக Hero Electric அறிவித்துள்ளது. இதனால், நிறுவனத்தின் ஊழியர்கள் பெரு மகிழ்ச்சியில் உறைந்திருந்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric!

இந்நிறுவனம் மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு நாட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த நிலையின் வாயிலாக அதிக பலனை அடைந்த நிறுவனங்களில் Hero Electric-ம் ஒன்று. இந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்குக் கடந்த காலங்களைக் காட்டிலும் சமீப சில மாதங்களாக நல்ல விற்பனை வரவேற்பு கிடைத்து வருகின்றது.

Most Read Articles

English summary
Ev maker hero electric launches hero care program for his employees
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X