“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

இந்தியாவின் முன்னணி இவி சார்ஜிங் கட்டமைப்பு நிறுவனமான இவ்ரே (EVRE), பார்க்கிங் & இவி சார்ஜிங் கட்டமைப்பு தீர்விற்கான பசுமையான லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவையினை வழங்கும் ஜிங்கோ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

ஜிங்கோ தற்சமயம் 10 நகரங்களில் 500க்கும் அதிகமான இவி-களை கொண்ட படையை இயக்குகிறது. மேலும் 10,000 இவி-களை கொண்ட வலிமையான படையினை அடைவதற்கு பணியாற்றி வருகிறது. இத்தகைய நிறுவனத்துடனான கூட்டணியின் கீழ், அடுத்த 24 மாதங்களுள் இந்தியா முழுவதும் 5 ஆயிரம் இவி சார்ஜிங் நிலையங்களை எவ்ரே கட்டமைக்க உள்ளது.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

இந்த சார்ஜிங் நிலையங்கள் ஜிங்கோ மற்றும் பிற எலக்ட்ரிக் உரிமையாளர்களால் பயன்படுத்தப்படும். ஜிங்கோ தனது புவியியல் விரிவாக்கத்திற்கு ஏற்ப, லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவைக்காக இந்த சார்ஜர்களை பயன்படுத்தும். மறுப்பக்கம், எவ்ரே ஆனது இவி சார்ஜிங் உள்கட்டமைப்பின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை வடிவமைத்து, தயாரித்து செயல்படுத்தும்.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

தற்போதுள்ள மற்றும் வரவிருக்கும் சார்ஜிங் நிலையங்களுக்கான அனைத்து தொழிற்நுட்பங்களையும் எவ்ரே சொந்தமாக வைத்திருக்கிறது மற்றும் இயக்குகிறது. இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக ஜிங்கோ நிறுவனம் தேவை ஒருங்கிணைப்பு, சப்ளை மேம்படுத்தல், சார்ஜிங் உள்கட்டமைப்பிற்கான இணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சிறந்த பயன்பாட்டிற்காக சார்ஜிங் நிலையங்களை எங்கு நிறுவுவது என்ற விஷயத்தில் எவ்ரேக்கு உதவும்.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

இத்தகைய கூட்டணிகள் இவி ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு உதவுகின்றன. இதனால் அவர்கள் சார்ஜிங் வசதி விஷயத்தில் பெரியதாக தங்களை ஈடுப்படுத்தி கொள்ளாமல், தங்கள் முக்கிய செயல்பாடுகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த முடியும். கூட்டணியின் முதல் கட்டமாக, எவ்ரே அதன் 500 சார்ஜிங் நிலையங்களின் மூலம் ஜிங்கோவின் 500 இவி-களை கொண்ட படைக்கு ஆதரவாக உதவிப்புரிய உள்ளது.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

இதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் நிலங்களை குத்தகைக்கு எடுக்கவுள்ள எவ்ரே, அந்த இடங்களில் பார்க்கிங் & சார்ஜிங் உள்கட்டமைப்பை வழங்க உள்ளது. மேலும் இதற்காக உருவாக்கப்பட உள்ள மையங்களின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கும் எவ்ரே தான் பொறுப்பாகும். அடுத்த சில மாதங்களில் ஜிங்கோ அதன் லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவைகளை புதிய இந்திய நகரங்களுக்கு விரிவுப்படுத்த உள்ளது. அத்தகைய நகரங்களில் ஜிங்கோவிற்கு எவ்ரே சார்ஜிங் நிலையங்களுடன் ஆதரவாக நிற்கும்.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

இதுகுறித்து ஜிங்கோ நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான பிரதீக் ராவ் கருத்து தெரிவிக்கையில், "மின் வணிக ஸ்பெக்ட்ரம் முழுவதும் ஹைப்பர் லோக்கல் டெலிவிரி சேவைகளின் மின்மயமாக்கலை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவையில் இவி சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுவருவதற்கான இந்த முயற்சிக்கு இதுபோன்ற கூட்டணிகள் தேவை.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

எவ்ரேவின் மேம்பட்ட தொழிற்நுட்ப சார்ஜிங் உள்கட்டமைப்பானது ஜிங்கோவின் முழு திறமையான மற்றும் மேம்பட்ட லாஜிஸ்டிக்ஸ் தொழிற்நுட்ப தளத்துடன் இணைந்து இவி சுற்றுச்சூழலுக்கு பாடுபடுகிறது மற்றும் இவி மாற்றத்திற்கு வித்திடுகிறது" என்றார். எவ்ரே நிறுவனத்தின் துணை நிறுவனரும், சிஇஓ-வுமான கிருஷ்ணா கே ஜஸ்டி இதுகுறித்து பேசுகையில், "கணினி பார்வை தொழிற்நுட்பத்தின் முன்னேற்றம் போன்ற சேவைகள் & வணிகங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் புதிய வணிக மதிப்பை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

இத்தகைய கூட்டணியின் மூலம் நாடு முழுவதும் உள்ள இவி ஃப்ளீட் உரிமையாளர்கள் மற்றும் இவி பயனர்களுக்கு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜிங்கோ, அதன் தனித்துவமான முன்மொழிவுடன் ஒரு பொருத்தமான கூட்டணி நிறுவனமாகும். ஏனெனில் இவ்விரு நிறுவனங்களும் இவி சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள வளங்களில் இருந்து பரஸ்பர பயனடைகின்றன" என்றார்.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

இந்த கூட்டணியில் கட்டமைக்கப்பட உள்ள 5,000 சார்ஜர்கள் எவ்ரே செயலி மூலம் நாடு முழுவதும் உள்ள இவி சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலமாக எந்தவொரு நபரது உதவியும் இல்லாமல் ஜிங்கோ ஃப்ளீட் ஆபரேட்டர்கள் தங்களது எலக்ட்ரிக் 2-வீலர் (அ) 3-வீலருக்கு மெதுவாகவோ அல்லது வேகமாகவோ சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். இதற்கான அளவீடு, பணம் செலுத்தும் முறை மற்றும் கட்டணம் வசூலிக்கும் திறன் உள்ளிட்டவற்றை இந்த மொபைல்போன் செயலியின் மூலமாக மேற்கொள்ளலாம்.

“10,000 இவி-கள், 5,000 இவி சார்ஜர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்” - எவ்ரே & ஜிங்கோ நிறுவனங்கள் கூட்டணி!!

ஜிங்கோ நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவைக்காக அமேசான், ஃப்ளிப்கார்ட், பிக் பேஸ்க்கெட் மற்றும் ஜியோ மார்ட் உள்ளிட்ட கார்ப்பிரேட் நிறுவனங்களுடன் கூட்டணியில் உள்ளது. எவ்ரே ஆனது கிட்டத்தட்ட 9 இந்திய நகரங்களில் சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. இவற்றை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் பணம் செலுத்தும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
EVRE and Zyngo Partner to Power 10,000 EVs with 5,000 EV chargers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X