200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 200-500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-10 பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 200-500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் 41,766 ஆக இருந்த இந்த மோட்டார்சைக்கிளின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 36,025 ஆக குறைந்துள்ளது.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

இது 13.75 சதவீத வீழ்ச்சி என்றாலும், இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் ஆதிக்கம் தொடர்கிறது. 11,044 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ராயல் என்பீல்டு புல்லட் 350 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் 10,589 புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இது 4.30 சதவீத வளர்ச்சியாகும்.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

மூன்றாவது இடத்தை கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 8,624 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. தற்போது இந்த செக்மெண்ட்டில் வாடிக்கையாளர்களின் ஃபேவரைட் பைக்குகளில் ஒன்றாக மீட்டியோர் 350 மாறி வருகிறது.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

நான்காவது இடத்தை ராயல் என்பீல்டு எலெக்ட்ரா 350 பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 3,695 ஆக இருந்த எலெக்ட்ரா 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 6,477 ஆக உயர்ந்துள்ளது. இது 75.29 சதவீத வளர்ச்சியாகும். முதல் 4 இடங்களை பிடித்ததன் மூலம் இந்த செக்மெண்ட்டில் மீண்டும் ஒரு முறை ராயல் என்பீல்டு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

ஐந்தாவது இடத்தை பஜாஜ் பல்சர் 220 பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 6,817 ஆக இருந்த பல்சர் 220 பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 4,938 ஆக குறைந்துள்ளது. இது 27.56 சதவீத வீழ்ச்சியாகும். 6வது இடத்தை மற்றொரு புதுவரவான ஹைனெஸ் சிபி350 பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரியில் ஹோண்டா நிறுவனம் 3,268 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

ஹைனெஸ் சிபி350 பைக் ஹோண்டாவின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை சிறப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏழாவது இடத்தை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பெற்றுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 2,165 ஆக இருந்த ஹிமாலயனின் விற்பனை எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் 2,660 ஆக உயர்ந்துள்ளது. இது 22.86 சதவீத வளர்ச்சியாகும்.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு கொண்டே இருப்பது ஹிமாலயனின் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். 8வது இடத்தை பஜாஜ் அவென்ஜர் 220 பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 455 ஆக இருந்த அவென்ஜர் 220 பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 1,003 ஆக உயர்ந்துள்ளது. இது 120.44 சதவீத வளர்ச்சியாகும்.

200-500 சிசி செக்மெண்ட்டில் பைக் வாங்க போறீங்களா? அப்போ மற்றவர்களின் ஃபேவரைட் எதுன்னு தெரிஞ்சுகோங்க...

ஒன்பதாவது இடத்தை பஜாஜ் டோமினார் 400 பெற்றுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 297 ஆக இருந்த டோமினார் 400 பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 969 ஆக உயர்ந்துள்ளது. இது 226.26 சதவீத வளர்ச்சியாகும். பத்தாவது மற்றும் கடைசி இடத்தை பஜாஜ் டோமினார் 250 பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் வெறும் 2 ஆக இருந்த டோமினார் 250 பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 748 ஆக உயர்ந்துள்ளது.

Most Read Articles

English summary
February 2021 Sales: Top 10 Bikes In 200cc To 500cc Segment. Read in Tamil
Story first published: Friday, March 26, 2021, 23:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X